இதே நாளில் அன்று| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
  இதே நாளில் அன்று

1643 அக்டோபர் 14

முதலாம் பகதுார் ஷா, மத்திய பிரதேச மாநிலம், புர்கான்பூரில், முகலாய பேரரசர் அவுரங்கசீப் - நவாப் பாய் பேகம் சகேபா தம்பதிக்கு மகனாக, 1643 அக்., 14 ல் பிறந்தார். இவரது இயற்பெயர் குதுப் உத்-தீன் முகம்மத் முவாசம். தந்தை காலத்தில், வடமேற்கு ஆட்சி பகுதிக்கு, கவர்னராக பகதுார் ஷா நியமிக்கப்பட்டார். தந்தையின் கடுமையான ஆணைகளை, தன் பகுதியில், பகதுார் ஷா தளர்த்தி இருந்தார்.அவுரங்கசீப் இறப்பிற்கு பின், 1707 முதல், 1712 வரை, இந்தியாவை ஆட்சி செய்தார். பகதுார் ஷா ஆட்சி பொறுப்பேற்ற போது, பேரரசு உறுதியற்ற நிலையில் இருந்தது. தந்தையுடன் ஒப்பிடும்போது, இவர் மிதவாதியாக இருந்தார். இவரது ஆட்சிக் காலத்தில் இசைக்கு மீண்டும் ஆதரவு அளிக்கப்பட்டது. கோவில்கள் எதுவும் அழிக்கப்படவில்லை.இவரது ஐந்தாண்டு ஆட்சியில் பேரரசு ஒன்றாக இருந்தாலும், உட்பூசல்கள் உயர்நிலையில் இருந்தன. இவரது தந்தையால் ஏற்படுத்தப்பட்ட, இந்த பாதிப்புகளை சீர்படுத்த முடியவில்லை. பகதுார் ஷா, 1712 பிப்., 27ல் காலமானார். அவர் பிறந்த தினம், இன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை