இமாச்சல் சட்டசபை தேர்தல் களத்தில் இறங்கியது காங்கிரஸ் Dinamalar
பதிவு செய்த நாள் :
இமாச்சல் சட்டசபை தேர்தல் களத்தில்
இறங்கியது காங்கிரஸ்

புதுடில்லி:இமாச்சல பிரதேசத்தில், சட்டசபை தேர்தலில் போட்டியிடும், காங்., கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்ய, தேர்வுக்குழு அமைக்கப்பட்டுஉள்ளது.

இமாச்சல் பிரதேசம் , Himachal Pradesh,சட்டசபை தேர்தல், Legislative Assembly, காங்கிரஸ், Congress,  முதல்வர் வீர்பத்ர சிங்,Chief Minister Veer Bhatra Singh, ஜிதேந்திர சிங் ,    Jitendra Singh,  சுக்வீந்தர் சிங் ,Sukwinder Singh, ராகுல் , Rahul,புதுடில்லி,New Delhi,

இமாச்சல பிரதேசத்தில், முதல்வர், வீர்பத்ர சிங் தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, நவ., 9ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது; இதற்கான வேட்பு மனு தாக்கல், 16ல் துவங்க உள்ளது. இந்நிலையில், காங்., வேட்பாளர்களை தேர்வு செய்ய, முன்னாள், எம்.பி., ஜிதேந்திர சிங் தலைமையில், மூன்று பேர் அடங்கிய தேர்வுக் குழுவை, அக்கட்சி மேலிடம் நியமித்துள்ளது.

இந்த குழு, 69 தொகுதிகளுக்கான

வேட்பாளர்களை தேர்வு செய்யும்; இதற்கு, மாநில தலைமை ஒப்புதல் அளித்து, டில்லி மேலிடத்துக்கு பரிந்துரை செய்யும். இறுதி வேட்பாளர் பட்டியலை, கட்சி மேலிடம் முடிவு செய்து அறிவிக்கும்.

காங்., பின்னடைவு


முதல்வர், வீர்பத்ரசிங் தலைமையில், காங்., கட்சி தேர்தலை சந்திக்கிறது. ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் உள்ள அக்கட்சிக்கு, பா.ஜ., கடும் போட்டியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில், வீர்பத்ர சிங்கிற்கும், மாநில காங்., தலைவர் சுக்வீந்தர் சிங் சுகுவுக்கும் இடையே பனிப்போர் நிலவுகிறது. சுக்வீந்தர் சிங்கை பதவி நீக்கம் செய்யாததால், கட்சித் தலைமை மீது வீர்பத்ர சிங் அதிருப்தியில் உள்ளார். மேலும், காங்., ஆட்சி மீது, மாநில மக்கள் அதிருப்தியில் உள்ளதால், மீண்டும் ஆட்சிக்கு வருவது கடினம் என, அரசியல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர். இம்மாநிலத்தில், ஒரு முறை கூட, காங்., இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியதில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ராகுலுக்கு ஆதரவு:

காங்., கட்சி தலைவர்

Advertisement

பதவியை, ராகுல் ஏற்க கோரி, உத்தரகண்ட் மாநில, காங்., கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.உத்தரகண்ட்தலைநகர், டேராடூனில், காங்., கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், காங்., கட்சிக்கு தலைமை ஏற்கும்படி, ராகுலை வலியுறுத்தி, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது, காங்., கட்சியில், மாநில நிர்வாகிகள் தேர்தல் நடந்து வருகிறது. இம்மாத இறுதிக் குள், கட்சிக்கு தலைவரை தேர்ந்தெடுத்து, உட்கட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்ய அக்கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
15-அக்-201711:05:55 IST Report Abuse

Tamizhan kanchiபண்டாரமாம் பரதேசியாம்....... திராவிடமாம் ஆரியமாம்.......... நீங்கள் மனிதர்களா. விலங்குகளா என்று உணர்ந்து கொண்டு கருத்து தெரிவியுங்கள் .

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-அக்-201722:10:55 IST Report Abuse

Pugazh Vஇந்தியாவில் எங்கே தேர்தல் நடந்தாலும் வாக்கு இயந்திரம் மூலம் என்றால் அது பிஜேபிக்கு தான் விழும். இது ஊரறிந்த உண்மை. அராஜக தேசத்தில் வேறவழியும் இல்லை.

Rate this:
Hariharan Iyer - Nagpur,இந்தியா
14-அக்-201715:36:54 IST Report Abuse

Hariharan Iyerசூப்பர் காசிமணிஜி

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)