வெறிச்சோடிய வட்டார போக்குவரத்து அலுவலகம்| Dinamalar

வெறிச்சோடிய வட்டார போக்குவரத்து அலுவலகம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ராமநாதபுரம், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அக்.,11ல் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையால், புரோக்கர்கள் ஓட்டம் பிடித்ததால் கடந்த இரண்டு நாட்களாக அலுவலகங்கள் வெறிச்சோடியது.
தமிழகத்தில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், சார்பதிவாளர் அலுவலகங்களின் புரோக்கர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ஓட்டுநர் உரிமம் பெறுவது முதல், அனைத்து பணிகளுக்கும் இப்போதெல்லாம் புரோக்கர்களே வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வருகின்றனர்.
இவர்களால் அதிகளவு லஞ்சம் வழங்கப்படுவதாகவும் தெரியவந்தது. இதையடுத்து, சென்னை சைதாப்பேட்டை, நெல்லை,தேனி, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, கன்னியாகுமரி, துாத்துக்குடி, காரைக்குடி, திண்டுக்கல், திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், அறந்தாங்கி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
ராமநாதபுரம், காரைக்குடி, திண்டுக்கல், நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பல லட்சம் பணம், ஆவணங்கள் சிக்கின. புரோக்கர்கள் பணத்தை அலுவலகத்தில் கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு யாரும் செல்லவில்லை.
வியாழன், வெள்ளிக்கிழமைகளில் கூட்டம் நிரம்பி வழியும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கேட்பாரற்ற நிலையில் ஒருவர் கூட வராததால் வெறிச்சோடியது. ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகமும் கடந்த இரண்டு நாட்களாக வெறிச்சோடியது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-அக்-201709:19:41 IST Report Abuse
Srinivasan Kannaiya எதுவும் ஆன்லைனில்தான் என்றால்.. ப்ரோப்ளேம் சால்வடு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.