தேர்தலுக்கு தி.மு.க., தயார்: ஸ்டாலின் Dinamalar
பதிவு செய்த நாள் :
தேர்தலுக்கு தி.மு.க., தயார்: ஸ்டாலின்

சென்னை:''சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., போட்டியிடும்,'' என, அக்கட்சியின் செயல் தலைவர், ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க., DMK,ஸ்டாலின், Stalin, சென்னை ஆர்.கே.நகர் ,Chennai RK Nagar,  இடைத்தேர்தல், by-election, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் ,DMK chief executive Stalin , தமிழகம்,Tamil Nadu, டெங்கு பாதிப்பு, Dengue effect, மருத்துவமனை,Hospital, ஜெயலலிதா,Jayalalitha, சிகிச்சை,Treatment, சென்னை,Chennai,

சென்னை அறிவாலயத்தில், அவரது பேட்டி:

தமிழகத்தில், 'டெங்கு' பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, மத்திய குழுவினர் வந்துள்ளனர். அவர்கள், தமிழகத்தில் நிலவும் உண்மை நிலையை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.மருத்துவமனையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது, டில்லியிலிருந்து வந்த,

'எய்ம்ஸ்' மருத்துவக் குழு, இதுவரை எதுவும் கூறவில்லை.சென்னை, ஆர்.கே.நகரில் எப்போது தேர்தல் நடந் தாலும், தி.மு.க., அதை எதிர் கொள்ளும். நாளைக்கே தேர்தல் நடந்தாலும், தி.மு.க., போட்டி இடும்.

ஆனால், என்ன காரணங்களுக்காக, ஆர்.கே.நகரில் தேர்தல் நிறுத்தப்பட்டதோ, அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

ஸ்டாலின், வெளியிட்டுள்ள அறிக்கை:


மக்களின் அத்தியாவசிய தேவைக்கான மின் கட்டணத்தையும், குடிநீர் கட்டணத்தையும் செலுத்த விடாமல்,மத்திய நிதியாணையம் அளித்து உள்ள அடிப்படை மானியத் தொகையை, 'கான்ட்ராக்ட், டெண்டர்'களுக்கு முழுவதுமாக பயன்படுத்தும்படி, நகராட்சி மற்றும் மாநகராட்சி கமிஷனர்களுக்கு,

Advertisement

உள்ளாட்சி துறை அமைச்சர், கடுமையான அழுத்தம் கொடுக்கும்அவலநிலை அதிர்ச்சி அளிக்கிறது.

எனவே, ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி, குடிநீர் வழங்கல் துறை ஆகிய வற்றின் அரசு செயலர்கள், இதில் தலையிட்டு, மத்திய மானியத்தை, மின் கட்டணம், குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு செலவழிக்க வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

தொடர்புடைய செய்திகள்:மேலும் முதல் பக்க செய்திகள்:வாசகர் கருத்து (41)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-அக்-201722:50:21 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்காவிகளும், காவி அடிமைகளும் கதி கலங்கி, வயிறு கலங்கி, மூளை கலங்கி பேதியாகியுள்ளது கருத்துக்களில் தெறித்து நாறுகிறது. தேர்தல் வைக்க நடுங்கி ஆயிரம் பொய்க்காரணம் சொல்லும் நபும்சகர்களின் வாய் மட்டும் கிழிகிறது.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-அக்-201722:50:11 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்தேர்தல் என்று ஒன்று வைத்தால், நமக்கு முடிவு பிடிக்குதோ, இல்லையோ, அந்த தொகுதியில் திமுக நிச்சயம் வெற்றியடையும் என்பது உண்மை.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-அக்-201721:16:42 IST Report Abuse

Pugazh Vஇங்கு பலரும் திமுகவை எதிர்த்து எழுதுவதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? எந்தக் குற்றச்சாட்டுமே நிரூபணமாகாமல் அவை அனைத்தும் பொய்யானவை என்று தெரியவில்லையா? இருந்தாலும் திமுக வுக்கு போடமாட்டாங்களாம்..போடாதே...தீச்சட்டி தூக்கின ஆத்துல தெர்மகோல் போட்ட டயர கும்பிட்ட, குற்றச்சாட்டு நிரூபணமாகி பதவி இழந்து 100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட ஜெஜெ கட்சிக்கு போடுவீங்க..அறிவாளிகள் ஆச்சே

Rate this:
Prem - chennai,இந்தியா
14-அக்-201716:18:17 IST Report Abuse

Premஎப்படியும் தோக்க தான் போற அப்புறம் ஏதுக்கு இந்த வெட்டி சீனு

Rate this:
vijayaraja - manama,பஹ்ரைன்
14-அக்-201716:11:11 IST Report Abuse

vijayarajaஸ்டாலின் நினைப்பது நடக்கவேண்டும் என்றால் மத்திய அரசு அதிமுகவை தூக்கி எறியும் போது தான் புலிகேசியை வைத்து பல காரியத்தை தமிழ் நாட்டில் நடத்த வேண்டி உள்ளது காரியம் முடிந்த மறுநிமிடம் ஆட்சி கலைக்கப்படும் இது புரியாமல் ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருவது வேடிக்கை இதில புலிகேசி மன்னர் யார் என்பதை அவரை நியமித்த தினகரன் சொன்னது

Rate this:
ramanathan - Ramanathapuram,இந்தியா
14-அக்-201715:47:25 IST Report Abuse

ramanathanநீங்க ரெடி.., நாங்க ரெடியாக இல்ல... .எங்க வரிப்பணம் தான் வீண்...? டெங்கு காய்ச்சல் பாதிப்பு இந்த நிலையில் தேர்தல் தேவையா... அதுசரி கட்டுமரம் குடும்பத்துக்கு மட்டும் டெங்கு கொசு கடிப்பதில்லையே ஏன்.....?

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
15-அக்-201708:29:09 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்டெங்கு காய்ச்சல் பாதிப்பு இந்த நிலையில் தேர்தல் தேவையா... ஓஹோ.. மத்திய குழுவை அழைத்ததன் ரகசியம் இது தானா.....

Rate this:
Siva Kumar - chennai,இந்தியா
14-அக்-201715:34:57 IST Report Abuse

Siva Kumarதமிழக மக்கள் எப்போது இந்த திராவிட கட்சிகளின் பிடியிலிருந்து வெளிவருகிறார்களோ, அன்றே தமிழகத்திற்கு உண்மையான விடுதலை.

Rate this:
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
14-அக்-201715:11:15 IST Report Abuse

GB.ரிஸ்வான் உங்களின் முதல்வர் கனவிற்கு வாழ்த்துக்கள்.... கனவு காண்பதில் தவறு இல்லை ...இதில் என்ன சோகம் என்றால் நீங்கள் கட்டு மரத்தின் பிள்ளை அது தான் பிரச்சனையே

Rate this:
Jeeva - virudhunagar,இந்தியா
14-அக்-201714:54:36 IST Report Abuse

Jeeva ஸ்டாலினுக்கு வேற வேலை இல்லை ? பதவி ஆசை கண்ணை மறைக்கிறது

Rate this:
shekaran - thiruchi,இந்தியா
14-அக்-201714:37:49 IST Report Abuse

shekaranதேர்தலுக்கு தி.மு.க., தயார்:- இருந்துட்டு போ யாரும் கேக்கலையே

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
மேலும் செய்திகள்