பல்லாங்குழியான சாலைகள்: கடற்கன்னி போராட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பல்லாங்குழியான சாலைகள்: கடற்கன்னி போராட்டம்

Added : அக் 13, 2017 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பல்லாங்குழியான, சாலைகள், கடற்கன்னி, போராட்டம்

பெங்களூரு:கர்நாடகா தலைநகர் பெங்களூரில், குண்டும், குழியுமாக உள்ள சாலைகளால், விபத்து நிகழ்ந்து, உயிர் பலி ஏற்படுவதை கண்டிக்கும் வகையில், சாலையின் பள்ளத்தில் தேங்கிய நீரில் அமர்ந்து, கடற்கன்னி போன்று வேடமணிந்த பெண், புதுமையான போராட்டம் நடத்தினார்.

கர்நாடகாவில், காங்.,கைச் சேர்ந்த சித்த ராமையா முதல்வராக உள்ளார். மாநிலத் தலைநகர் பெங்களூரில் பல சாலைகள், குண்டும், குழியுமாக இருப்பதால், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. சமீப காலத்தில், நான்கு பேர் சாலை விபத்து களில் உயிரிழந்து உள்ளனர்.

இதற்கு மக்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதைஅடுத்து, இரு வாரங்களில், பெங்களூரு நகர சாலைகளை சீரமைக்கும்படி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், குண்டும், குழியுமாக சாலைகள் இருப்பதை கண்டிக்கும் வகையிலும், அவற்றை விரைவில் சீரமைக்க கோரிக்கை விடும் வகையிலும், மாடல் அழகி ஒருவர், புதுமையான போராட்டம் நடத்தியுள்ளார். பிரதான சாலை ஒன்றில், தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில், கடற்கன்னி போன்று வேடமணிந்த அந்த பெண் அமர்ந்து, தன் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Appu - Madurai,இந்தியா
14-அக்-201714:55:50 IST Report Abuse
Appu போராட்டம் நியாயமானதே...ஆனா அந்த கடற்கன்னி உக்காந்திருக்க ரோட்டு பள்ளம் கடல் நீல கலரு பிக்ச்சரு ரொம்பவே ஓவர்..பார்வைக்கு வண்ணத்துல வரைஞ்சு ஓவியம் போல இருக்கு...
Rate this:
Share this comment
Cancel
Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா
14-அக்-201710:15:23 IST Report Abuse
Arun Kumar இதே ஒரு ஆம்பள பண்ணுனா ட்ரவுசரை கலத்திருவானுங்க...
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
14-அக்-201710:05:37 IST Report Abuse
P. SIV GOWRI ஏற்கனவே டிராபிக். இது வேற. நல்ல விளம்பரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை