ராமநாதபுரத்தில் ஜூனியர் தடகள போட்டி துவங்கியது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் ஜூனியர் தடகள போட்டி துவங்கியது

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் மாநில ஜூனியர் தடகள போட்டிகள் துவங்கிய நிலையில், மாலையில் மழையால் தடைபட்டது.
தமிழ்நாடு தடகள கழகம், ராமநாதபுரம் மாவட்ட தடகள கழகம் சார்பில், மாநில ஜூனியர் தடகள போட்டி ராமநாதபுரத்தில் நேற்று
துவங்கியது.
அக்.,15 வரை ராமநாதபுரம் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டரங்கில்மூன்று நாட்கள்
நடக்கும் போட்டியில், தமிழகம் முழுவதும் இருந்து இரண்டாயிரத்திற்கும்
மேற்பட்ட வீரர்கள்,
வீராங்கனைகள்
பங்கேற்றனர்.
துவக்க விழாவில் அன்வர்ராஜா எம்.பி., தலைமை வகித்து போட்டிக்கான தீபம் ஏற்றினார்.கலெக்டர் நடராஜன் போட்டிகளை துவக்கி வைத்தார்.
எஸ்.பி., ஓம்பிரகாஷ் மீனா முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட தடகள கழகம் தலைவர் வேலு.மனோகரன் வரவேற்றார்.
செயலாளர் ஏ.என்.ரகு, தமிழக தடகள கழக பொருளாளர் லதா உட்பட பலர் பங்கேற்றனர்.
போட்டிகளில், 100 மீ, 1000 மீ, நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்து முடிந்தன.
மாலை 4:00 மணிக்கு மழை பெய்ததால் போட்டிகள் தடைபட்டன. இதனால், வெற்றி பெற்றவர்கள் குறித்த விவரங்களை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை