சிவகங்கையில் 1,000 கண்மாயின் வரத்துக்கால்வாய் மாயம்| Dinamalar

சிவகங்கையில் 1,000 கண்மாயின் வரத்துக்கால்வாய் மாயம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சிவகங்கை, சிவகங்கை மாவட்டத்தில் முறையான பராமரிப்பு இல்லாததால் ஆயிரம் கண்மாய்களுக்குரிய வரத்துக்கால்வாய்கள் மாயமாகிவிட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் 678 பொதுப்பணித்துறை கண்மாய்கள், 4,288 ஒன்றிய கண்மாய் என, 4,966 கண்மாய்கள் உள்ளன.
தவிர வைகை, பெரியார் பாசன கண்மாய்கள் 98 உள்ளன. பொதுப்
பணித்துறை கண்மாய்கள் மூலம் 58,186 எக்டேர், ஒன்றிய கண்மாய்கள் மூலம் 47,681 எக்டேர் என, 1,05,867 எக்டேரில் சாகுபடி பரப்பு உள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை சராசரியாக 309 மி.மீ., இருக்கும். இந்தாண்டு 535 மி.மீ., பெய்துள்ளது. இது சராசரியை விட 73 சதவீதம் அதிகம்.
அக்டோபரில் இதுவரை 27.8 மி.மீ., மழை பெய்துள்ளது. ஆண்டு சராசரியான 904 மி.மீ., ல் இதுவரை 755 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இருந்தபோதிலும் பெரும்பாலான கண்மாய்களில் மடையை கூட தண்ணீர் எட்டவில்லை. சில கண்மாய்களில் ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்லை. விவசாயிகள் ஆய்வு செய்ததில் முறையான பராமரிப்பு இல்லாததால் ஆயிரத்து 18 கண்மாய்களின் வரத்துக்கால்வாய்கள் முற்றிலும் மறைந்துவிட்டன. 557 கண்மாய்கள் சீமைக்கருவேல மரங்கள், அதலசெடியால் இருந்த இடம் தெரியாதபடி மாயமாகிவிட்டன.
இதில் பெரும்பாலும் பொதுப்பணித்துறை கண்மாய்களாக உள்ளன என்பது ஆய்வில் தெரியவந்தது.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆதிமூலம் கூறியதாவது: சராசரியை விட இந்தாண்டு நல்ல மழை பெய்துள்ளது. இருந்தபோதிலும் கண்மாய்களுக்கு நீர்
வரத்து இல்லை. குடிமராமரத்து திட்டத்தில் ஒருசில பொதுப்பணித்துறை கண்மாய்கள் மட்டுமே துார்வாரப்பட்டன. கண்மாய்களில் இலவசமாக மண் அள்ளும் திட்டமும் கைகொடுக்கவில்லை. கண்மாய் துார்வாரிய இடங்களில் வரத்துக்கால்வாய்களை சீரமைக்கவில்லை.இதனால் கண்மாய்களுக்கு நீர்வரவில்லை.
மானாவாரி விவசாயிகள் மட்டுமே சாகுபடி செய்துள்ளனர், என்றனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.