பள்ளி வராண்டா கூரை இடிந்து விழுந்தது:இரவில் விழுந்ததால் விபரீதம் இல்லை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி வராண்டா கூரை இடிந்து விழுந்தது:இரவில் விழுந்ததால் விபரீதம் இல்லை

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

அன்னுார்:கோவை அருகே அன்னுாரில், அரசு துவக்கப்பள்ளியில், வராண்டா மேற்கூரை இடிந்து விழுந்தது.கோவை மாவட்டம், அன்னுார் அருகே செல்லனுாரில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 62 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பேபி சரோஜா தலைமை ஆசிரியராக உள்ளார். தலைமை ஆசிரியை உள்பட மூன்று ஆசிரியர் பணிபுரிகின்றனர்.
இப்பள்ளி கட்டடம் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், 2005ல் கட்டப்பட்டது. இரு வகுப்பறைகளும், ஒரு தலைமை ஆசிரியை அறையும் உள்ளன. இங்கு பள்ளி வகுப்பறைக்கு முன் உள்ள வராண்டாவின் மேற்கூரையில் சன்ஷேடு அமைக்கப்பட்டுள்ளது.நேற்று முன் தினம் இரவு பெய்த மழையில் நனைந்த சன்ஷேடு சுவர், நேற்று அதிகாலையில் இடிந்து விழுந்தது. இதையடுத்து நேற்று காலையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் அருகிலுள்ள சமையலறையில் தங்க வைக்கப்பட்டனர்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமசாமி கூறுகையில்,'' புதிய கட்டடம் கட்டி முடித்த பின் மேல்தளத்தில் சுருக்கி போடவில்லை. மழை நீர் கீழே செல்லும்படி வாட்டம் அமைக்கவில்லை. மழை பெய்தால் மேல்தளத்தில் நீர் நிற்கிறது. சுருக்கி போட வேண்டும் என அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை இல்லை. பள்ளி நேரத்தில் இடிந்து விழுந்திருந்தால் விபரீதம் ஏற்பட்டிருக்கும். அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
உதவி தொடக்க கல்வி அலுவலர் ரங்கராஜ் கூறுகையில், '' மாணவர்கள் அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொங்கி கொண்டிருக்கும் மீதி சன்சேடு அகற்றப்படும்,'' என்றார்.உதவி செயற்பொறியாளர் சுப்பையா, பி.டி.ஓ., விஜயராணி உட்பட பலர் பள்ளியில் ஆய்வு செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை