துணை தாசில்தார்கள் பதவி உயர்வில் சந்தேகம்: வருவாய்த்துறையில் பூகம்பம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துணை தாசில்தார்கள் பதவி உயர்வில் சந்தேகம்: வருவாய்த்துறையில் பூகம்பம்

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சிவகங்கை, சிவகங்கை மாவட்டத்தில் துணை தாசில்தார்கள் பதவி உயர்வில் சந்தேகம் இருப்பதாக வருவாய்த்துறையினரே சந்தேகத்தை கிளப்பியுள்ளனர்.
வருவாய்த்துறையில் ஆண்டுதோறும் செப்டம்பரில் தகுதி அடிப்படையில் உதவியாளர் சீனியாரிட்டி பட்டியல் வெளியிடப்பட்டு, துணை தாசில்தார் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு செப்., 23 ல் துணை தாசில்தார்களாக சிலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
சீனியாரிட்டி பட்டியல் வெளியிடாமலேயே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பதவி உயர்வு பெற்றோருக்கு வாய்மொழி மூலமே தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
அவசர, அவசரமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தகுதியற்ற நபர்கள் இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளதாக வருவாய்த்துறையில் ஒருபிரிவினரே சந்தேகத்தை கிளப்பியுள்ளனர்.
மேலும் பதவி உயர்வு வழங்கி 20 நாட்களாகியும் சீனியாரிட்டி பட்டியலை வெளியிட மாவட்ட நிர்வாகம் தாமதப்படுத்தி வருகிறது.
இந்த குழப்பத்திற்கு கலெக்டர் முடிவு கட்ட வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப் 2 நேரடி நியமன அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் தர்மராஜ் கூறியதாவது:
அவசர, அவசரமாக துணை தாசில்தார் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே பணியில் இருந்த துணை தாசில்தார்கள் கட்டாய பயிற்சிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். துணை தாசில்தார் பட்டியலை வெளியிட மாவட்ட நிர்வாகம் மறுத்து வருகிறது.
இதுகுறித்து கலெக்டரிடம் நேர்முக உதவியாளரிடம் (பொது) பல முறை வலியுறுத்தியும் வெளியிடவில்லை. துணை தாசில்தார் பட்டியலில் தகுதியான நபர்கள் சேர்ந்துள்ளனரா என்பதே சந்தேகமாக உள்ளது.
தகுதியற்ற நபர்கள் சேர்ந்துள்ளதால், பட்டியலை வெளியிட தயக்கம் காட்டப்பட்டு வருகிறது. பட்டியல் வெளியாததால் பதவி உயர்வு பெற்றோருக்கு ஊதியம் பெறுவதிலும் சிக்கல் ஏற்படும், என்றார்.
கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சீனியாரிட்டி பட்டியலில் எந்த விதிமீறலும் இல்லை. நிர்வாக காரணங்களால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்,' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை