கோவை அருகே வாலிபர் எரித்து கொலை| Dinamalar

கோவை அருகே வாலிபர் எரித்து கொலை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சூலுார்:கோவை அருகே, வாலிபர் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.கோவை மாவட்டம், சூலுார் அடுத்த காசிகவுண்டன்புதுார்- காங்கயம்பாளையம் சாலை அருகில் உள்ள முள் காட்டில், ஆண் சடலம் எரிந்த நிலையில் கிடப்பதாக, வி.ஏ.ஓ., லாவண்யாவுக்கு தகவல் கிடைத்தது. அவர் சூலுார் போலீசில் புகார் தெரிவித்தார்.இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டனர். கால்கள் தவிர மற்ற பகுதிகள் எரிந்த நிலையில் இருந்தது. மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தடயங்கள் சேகரிக்கப்பட்டன. சந்தேகத்துக்கு உரிய மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், சடலமாக கிடந்தவர், கிணத்துக்கடவு அடுத்த சென்றாம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் அருள்ராஜ், 18 என்பது தெரிந்தது.கடந்த ஆறு மாதங்களாக அருள்ராஜ், கலங்கலை சேர்ந்த அய்யாசாமி என்பவருக்கு சொந்தமான, 300 செம்மறி ஆடுகளை மேய்த்து வந்துள்ளார்.
போலீசார் கூறுகையில் 'சில நாட்களுக்கு முன், அருப்புக்கோட்டையை சேர்ந்த முத்துப்பாண்டி, 22 என்பவர் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளார். அருள்ராஜ் கொலைக்கு பிறகு முத்துப்பாண்டியை காணவில்லை. அவரிடம் விசாரித்தால், கொலைக்கான காரணம் தெரியவரும்' என்றனர். இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில், இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.