டாஸ்மாக் இருப்பு விவரம் சேகரிக்க உத்தரவு:மதுபானங்கள் விலை உயர்வு எதிரொலி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் இருப்பு விவரம் சேகரிக்க உத்தரவு:மதுபானங்கள் விலை உயர்வு எதிரொலி

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருப்பூர்;மதுபான விலை உயர்த்தப்பட்டதால், முறைகேடுகளை தடுக்கும் வகையில், அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளிலும் இருப்பு பட்டியல் பெறப்பட்டது.தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிறுவனத்தின், 6,000க்கும் மேற்பட்ட சில்லரை மது விற்பனை கடைகள் செயல்படுகின்றன.
மது விலையை உயர்த்த, அரசு முடிவு செய்தது. இதையடுத்து, நேற்று முன்தினம், டாஸ்மாக் நிர்வாக மேலாளர் அலுவலகத்தில் இருந்து, அனைத்து முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு, அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
அதில், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளிலும், 12ம் தேதி விற்பனை முடிந்து, இரவு 10:00 மணியளவில் இருப்பில் உள்ள மது வகைகள் குறித்த விவரம் பெற உத்தரவிடப்பட்டது. கடைவாரியாக, இருப்பில் உள்ள மது வகைகள் மற்றும் பாட்டில் இருப்பு விவரங்களை, உரிய கடை மேற்பார்வையாளர் மூலம் பெற்று, நேற்று பகல் 12:00 மணிக்கு முன், மாவட்ட மேலாளர்கள், தங்களிடம் மூடி முத்திரையிட்ட கவர்களில் வைக்கவும், அதை தணிக்கைக்கு சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.அனைத்து பகுதியிலும் இந்த விவரங்கள், கடை மேற்பார்வையாளர் மூலம், மாவட்ட மேலாளர்கள் பெற்றனர்.
இந்த விவரங்கள் அனைத்தும் உடனடியாக, இ--மெயில் வாயிலாக டாஸ்மாக் நிர்வாக மேலாளருக்கு அனுப்பப்பட்டது.மது வகைகளின் விலை உயர்வை காரணம் காட்டி, கடை விற்பனையாளர்கள் எவ்வகையிலும் முறைகேட்டில் ஈடுபடக்கூடாது என்பதற்காக இந்த இருப்பு பட்டியல் பெறப்பட்டது. விலை உயர்வு அமல்படுத்துவதற்கு முன்பே விற்பனையாகி விட்டதாக கணக்கு காட்டி, கூடுதல் தொகையை ஊழியர்கள் மோசடி செய்யாமல் தடுக்கவே, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை