விவசாயிகள் ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


சிவகங்கை, தனியார் நிறுவனம் மூலம் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்த கூடாது என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் குணசேகரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்டத் தலைவர் கோபால், பொருளாளர் ஆறுமுகம், இந்திய கம்யூ., நகரச் செயலாளர் ராஜேஷ், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்டச் செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தை அரசே நடத்த வேண்டும். விவசாயம் பொய்த்துபோனதால் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். புதிய பயிர் கடன்களை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். 2016-17 ல் விடுப்பட்ட விவசாயிகளுக்கும் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை