'வனப்பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது':சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'வனப்பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது':சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அறிவுரை

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஊட்டி:நீலகிரியில் உள்ள வனப்பகுதிகளில், பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, வனத்துறை சார்பில், துண்டு பிரசுரம் வினியோகிக்கப்படுகிறது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி பொக்காபுரம், மசினகுடி, மாவனல்லா, வாழைத்தோட்டம், சிங்காரா பகுதிகளில், ஏராளமான குடியிருப்புகள் மற்றும் விடுதிகள் உள்ளன.
தீபாவளி விடுமுறைக்கு, முதுமலை சுற்றியுள்ள பகுதிக்கு, அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவர்; குறிப்பாக, கேரளா, கர்நாடக மாநில சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து, அங்குள்ள தனியார் காட்டேஜ்களில் தங்கி, தீபாவளியை கொண்டாடுவது வழக்கம்.'தீபாவளியன்று, வனத்தை ஒட்டிய பகுதிகளில், பட்டாசு வெடிக்கக் கூடாது' என, வலியுறுத்தி, வனத்துறையினர் விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர்.
நீலகிரி வடக்கு வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் சரவணன் கூறுகையில், ''பட்டாசு சப்தத்தால் விலங்கு, பறவைகள் பாதிக்கப்படும் என்பதால், தீபாவளி சமயத்தில், வனத்தை ஒட்டிய பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது என, சுற்றுலா பயணிகள் மற்றும் காட்டேஜ் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கி, துண்டு பிரசுரம் வினியோகித்து வருகிறோம். பட்டாசு வெடிப்பதால் விலங்குகளுக்கு பாதிப்போ, வனத்தீ போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடந்தால், சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை