கொள்ளை கட்டணம் வாங்கும் ஆம்னி பஸ்களுக்கு கிடுக்கிப்பிடி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஆம்னி பஸ்,Omni bus, கூடுதல் கட்டணம் ,additional charge, சிறப்பு கண்காணிப்பு குழு, special monitoring team, தீபாவளி, Deepavali,தீபாவளி பண்டிகை, Diwali festival, போக்குவரத்து துறை , transport department, ஆர்.டி.ஓ., RTO,கொள்ளை கட்டணம், Robbery charges,

சென்னை:கொள்ளை கட்டணம் வாங்கும், ஆம்னி பஸ்களுக்கு கிடுக்கிப்பிடி போடப்பட்டு உள்ளது. பயணியரிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டுபிடிக்க, மாநிலம் முழுவதும், 36 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிடிபடும் ஆம்னி பஸ்களின் உரிமத்தை ரத்து செய்யவும், ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தீபாவளி நெரிசலை பயன்படுத்தி, ஆம்னி பஸ்களில் நடக்கும் முறைகேடுகளுக்கு, இதன் வாயிலாக, அரசு, 'செக்' வைத்துள்ளது.

ஆம்னி பஸ்,Omni bus, கூடுதல் கட்டணம் ,additional charge, சிறப்பு கண்காணிப்பு குழு, special monitoring team, தீபாவளி, Deepavali,தீபாவளி பண்டிகை, Diwali festival, போக்குவரத்து துறை , transport department, ஆர்.டி.ஓ., RTO,கொள்ளை கட்டணம், Robbery charges,

தீபாவளி பண்டிகையை சாதகமாக பயன்படுத்தி, ஆம்னி பஸ்களில், கொள்ளை கட்டணம்

வசூலிக்கப்படுகிறது. அவ்வாறு அதிக கட்டணம் வசூலித்தால், பஸ்களின் உரிமம் ரத்து செய்யப் படும் எனவும், வசூலித்த கூடுதல் தொகையை, பயணியரிடம் திருப்பி தர வேண்டும் எனவும், போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.ஆனாலும், ஆம்னி பஸ்களில், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக, போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு, அதிக புகார்கள் வருகின்றன.

உரிமம் ரத்து


இந்நிலையில், சென்னையில், நேற்று வடக்கு மற்றும் தெற்கு போக்குவரத்து இணை கமிஷனர்கள், ஆம்னி பஸ் உரிமையாளர்களை அழைத்து, பேச்சு நடத்தினர். அதில், 'ஏற்கனவே உள்ள கட்டணத்தை விட, கூடுதலாக வசூலித்தால், பஸ்சின் உரிமம் ரத்து செய்யப் படும்' என, எச்சரித்தனர்.ஆம்னி பஸ்களை கண்காணிக்க, சென்னையில், ஆறு உட்பட, தமிழகம் முழுவதும், 36 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு

Advertisement

குழுவிலும், ஆர்.டி.ஓ., என்ற, வட்டார போக்கு வரத்து அதிகாரி தலைமையில், 2மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இடம் பெறுவர். சென்னையில், கோயம்பேடு, ஊரப்பாக்கம் பஸ் நிலையங்கள்; போரூர், கிழக்கு கடற்கரை சாலை, செங்குன்றம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில், இச்சிறப்பு குழுவினர், நேற்று முதல், ஆம்னி பஸ்களை ஆய்வு செய்ய துவங்கினர்.அதிக கட்டணம் வசூலிக்கும், ஆம்னி பஸ்கள் குறித்த புகார்களை, 1800 425 6151 என்ற, இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

ரூ.42 லட்சம் அபராதம்


'ஏற்கனவே, ஆயுத பூஜையின் போது நடந்த வாகன சோதனையில், அதிக கட்டணம் வசூலித்த, 15 ஆம்னி பஸ்கள் சிறைபிடிக்கப் பட்டன. 'முறைகேடாக இயக்கப்பட்ட ஆம்னி பஸ்களிடம் இருந்து, 42 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது' என, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (32)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Soosaa - CHENNAI,இந்தியா
14-அக்-201721:34:30 IST Report Abuse

SoosaaMudhalla omni bus private bus ellathaiyum thadai seyyanum vasadhi ra peyaril kollai. Adhigama panam vangittu Indha madhiri visesha natkalil sariyana neratthukkum povadhillai. Driver thattupfu Vera.

Rate this:
Parthasarathy Ravindran - Chennai,இந்தியா
14-அக்-201720:34:16 IST Report Abuse

Parthasarathy Ravindranலஞ்சம் வாங்க நல்ல வழி, ஒருவரும் பிடிபட மாட்டார்கள், நடவடிக்கை எடுக்கிறோம் என்பதற்கு கண்துடைப்பு வேலை,

Rate this:
14-அக்-201719:29:12 IST Report Abuse

அப்பாவிஊருக்கும் போகணும்... சுகமாகவும் போகணும்... ஆனா காசு குடுக்க மாட்டோம். உங்கள மாதிரி ஆளுங்க இருக்கற வரை போலீஸ் காட்டுல மழை.

Rate this:
V.Sadagopan - Hosur,இந்தியா
14-அக்-201719:25:40 IST Report Abuse

V.Sadagopanதிருடன் கையில் சாவி என்பது போல குழுவில் இடம் பெறும் RTO க்கள் தான் ஆம்னி பேருந்து உரிமம் வழங்குவதில் முறைகேடு செய்து உரிமம் வழங்குவது ஊரே அறிந்த விஷயம்.. மேலும் கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை என்பது போல ,இணயம் மூலம் பதிவு செய்தாலே எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று தெரியாதா இல்லை தெரியாதது போல நடிக்கிறார்களா ? விழாக்காலங்களில் இத்தகைய சூழல் ஏற்பட முக்கிய காரணம் அரசு பேருந்துகள் குறைந்த அளவில் இருப்பதும், மற்றும் இருக்கும் பேருந்துகளையும் சரிவர பராமரிக்காமல் இருப்பதும் தான். இதை சரி செய்ய அரசு முயற்சி செய்ய வேண்டும்.

Rate this:
raja - Kanchipuram,இந்தியா
14-அக்-201719:07:23 IST Report Abuse

rajaமக்கள் படும் பாடு அரசுக்கு தெரிவதில்லை. எப்படி கல்வி நிறுவனங்கள் இவர்களாலோ அல்லது இவர்களது பினாமிகளோ நடத்தப்படுகிறதோ அது போலவே பேருந்துகளும் அவர்களுடையது. சில அரசியல்வாதிகளின் கைக்கூலி அரசாங்க அதிகாரிகள் உடையது.

Rate this:
M Ragh - Kanchi,இந்தியா
14-அக்-201719:04:56 IST Report Abuse

M RaghGovt bus express, deluxe nnu poddu kolla adigudu, Ippo commission tharada alunga mattum matti vanga. Chennai la max.. route la 5 bus onnu pola povudu. Onnu pola varudu. Cap la30 to 45 min.. bus irukkadu. Innum time grand father kalathula pottada follow pantranga. Suyama sinthikka mattangala officers idula porattam vera

Rate this:
jagan - Chennai,இந்தியா
14-அக்-201717:57:22 IST Report Abuse

jaganஅதிக கட்டணம் குடுக்க பிடிக்காதவர்கள் நடந்தோ இல்ல சைக்கிளிலோ போகவும்..... தனியார் துப்பாக்கி முனையில் இவர்களை தங்கள் பஸ்ஸில் வர சொல்லவில்லை ....தன் காசு போட்டு ஓட்டுகிறார்கள்

Rate this:
jagan - Chennai,இந்தியா
14-அக்-201717:51:35 IST Report Abuse

jaganகுழு அமைப்பதே கல்லா கட்டத் தான்.... இதெல்லாம் சப்ளை அண்ட் டிமாண்ட் , அதிக கூட்டம் , குறைந்த பஸ் இருக்கும் வரை ஒரு ஆணியும் புடுங்க முடியாது.... குழு , போலீஸ் எல்லோருக்கும் தீபாவளி போனஸ்

Rate this:
thiru - Chennai,இந்தியா
14-அக்-201715:27:54 IST Report Abuse

thiruமத்திய அரசுடன் சேர்ந்து மாநில அரசும் முட்டாள் தனமாக அறிவிப்புகள் எச்சரிக்கைகள் விடுது.. மக்கள் முட்டாள்கள்அல்ல...

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-அக்-201714:52:54 IST Report Abuse

Pugazh Vமுட்டாள் தனத்தின் உச்சம் இந்த அரசின் இந்த அறிவிப்பு. ஆன்லைனில் ஆயிரமாயிரம் மக்கள் புக் பண்ணியாச்சு இனி என்ன கிடுக்கிப்பிடி புண்ணாக்கு. இதேமாதிரி ரம்மி.காம் என் இன்னொரு சைட் காசு வெச்சு சீட்டாடறாங்க. புடிக்க சொல்லுங்க பாக்கலாம். டிஜிட்டல் இந்தியா..

Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement