'டெங்கு'வை ஒழிக்க ரூ.256 கோடி தேவை டில்லியிடம் கேட்கிறது தமிழகம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'டெங்கு'வை ஒழிக்க ரூ.256 கோடி தேவை
டில்லியிடம் கேட்கிறது தமிழகம்

சென்னை:'தமிழகத்தில் அதிகரித்து வரும், 'டெங்கு' காய்ச்சலை கட்டுப்படுத்த, 256 கோடி ரூபாய் வேண்டும்' என, மத்திய குழுவிடம், தமிழக அரசு கோரி உள்ளது. அதே நேரத்தில், டெங்குவை கட்டுப்படுத்த, தமிழக அரசு தவறி விட்டதாக, மத்திய குழு குற்றஞ்சாட்டி உள்ளது.

டெங்கு காய்ச்சல், Dengue Fever, தமிழக அரசு,Tamilnadu Government,  துணை முதல்வர் பன்னீர் செல்வம்,  Vice Chief Minister Panneerselvam, பிரதமர் மோடி, Prime Minister Modi,  மத்திய அரசு , Central Government, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், Health Minister vijayabaskar, சுகாதாரத் துறை, Health Department, உள்ளாட்சி துறை,Local Government Department, வருவாய் துறை,Revenue Department, எய்ம்ஸ் டாக்டர் அசித்தோஷ் பிஸ்வாஷ் , AIIMS Dr. Ashithosh Biswash,நிலவேம்பு கஷாயம், neem, டெங்கு, Dengue, டில்லி,Delhi தமிழகம், Tamil Nadu, சென்னை,Chennai,

தமிழகத்தில், டெங்கு காய்ச்சலால், 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்; 40 பேர் உயிரிழந்து உள்ளனர். டெங்குவை கட்டுபடுத்த முடியாமல், அரசு திணறி வருகிறது. இந் நிலையில், துணை முதல்வர் பன்னீர் செல்வம், டில்லியில், பிரதமர் மோடியை, நேற்று முன் தினம் சந்தித்தார்.

அப்போது, டெங்குவை கட்டுக்குள் கொண்டு வர, மத்திய அரசு உதவும்படி கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து, 'எய்ம்ஸ்' டாக்டர் அசித்தோஷ் பிஸ்வாஷ் தலைமையில், ஐந்து பேர் இடம் பெற்ற மத்திய குழு, அன்று இரவே சென்னை வந்தது.இந்த குழு, சென்னை, தேனாம்பேட்டை,டி.எம்.எஸ்., வளாகத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத் துறை, உள்ளாட்சி துறை, வருவாய் துறை அதிகாரிகளு டன், நேற்று, ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தியது.

அப்போது, டெங்கு பாதிக்கப்பட்டோர் குறித்த பட்டியல்; தமிழகஅரசு எடுத்த நடவடிக்கைகள்; அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் குறித்த பட்டியல் போன்றவை, மத்திய குழுவிடம் அளிக்கப்பட்டன. கூட்டத்துக்கு பின், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ''மத்திய குழு கேட்ட ஆவணங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டு உள்ளன. டெங்குவை கட்டுப்படுத்த, 256 கோடி ரூபாய் கூடுதல் நிதி கோரி உள்ளோம்,'' என்றார்.

'எய்ம்ஸ்' டாக்டர் அசித்தோஷ் பிஸ்வாஷ் கூறியதாவது:


தமிழகத்தில், 12 ஆயிரம் பேர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்; 40 பேர் உயிரிழந்து உள்ளனர். டெங்குவை கட்டுப்படுத்த, தமிழக அரசு

Advertisement

தவறி விட்டது. ஆனாலும், சிறப்பான முறையில், டெங்குவைகட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், தமிழக அரசு ஈடுபடுகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு பின், டெங்குவின் தாக்கம் அதிகமாக உள்ளது. வீடுகளில், தண்ணீர் சேமித்து வைக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. பொதுமக்கள்,வீடுகளை சுற்றி, தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; மக்களின் பழக்கவழக்கங் கள் மாற வேண்டும்.

அறிவியல் பூர்வமாக, நிலவேம்பு கஷாயம், டெங்குவை கட்டுப்படுத் தும் என, நிரூபணம் ஆகவில்லை. தமிழகத்தில், நிலவேம்பு கஷாயம் பயனுள்ளதாக இருப்பதாக தெரிகிறது. ஆனால், டெங்குக்கு, நிலவேம்பு கஷாயத்தை பரிந்துரைக்க முடியாது.டெங்கு தீவிர நோய் இல்லை.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதன் மூலமா கவே, கட்டுப்படுத்த முடியும். தமிழகத்தில், சில நாட்கள் தங்கியிருந்து, டெங்கு பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் பொதுமக்களை சந்திக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார். இதை அடுத்து, சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ மனையில், மத்திய குழு ஆய்வு நடத்தியது.


Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prem - chennai,இந்தியா
14-அக்-201716:19:41 IST Report Abuse

Premதமிழக அரசு மக்களின் நலனை கருதியே எல்லா முடிவையும் எடுக்கும்

Rate this:
Jeeva - virudhunagar,இந்தியா
14-அக்-201714:57:45 IST Report Abuse

Jeeva மக்களுக்காக என்றால் அனைத்தையும் டெங்குவிற்கு பயன்படுத்துங்கள் .

Rate this:
shekaran - thiruchi,இந்தியா
14-அக்-201714:39:21 IST Report Abuse

shekarandengue vai olliththaal sari..makkalukku namai seiyum vithamaaga anaiththum amaiyattum

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)