ஜெ., கைவிரல் ரேகை வழக்கு: சான்றளித்த டாக்டர் ஆஜராக உத்தரவு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ., கைவிரல் ரேகை வழக்கு:
சான்றளித்த டாக்டர் ஆஜராக உத்தரவு

சென்னை:திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில், தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்த படிவத்தில் உள்ள, ஜெயலலிதா வின் கைரேகை குறித்து, தேர்தல் ஆணைய முதன்மை செயலர் சாட்சியம் அளித்தார். கைரேகைக்கு சான்றொப்பம் செய்த, டாக்டர் பாலாஜி, வரும், 27ம் தேதி ஆஜராகும் படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

 ஜெ., கைவிரல்,ரேகை,வழக்கு: சான்றளித்த,டாக்டர்,ஆஜராக உத்தரவு

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், போஸ், தி.மு.க., சார்பில், டாக்டர் சரவணன் போட்டியிட்டனர்; போஸ் வெற்றி பெற்றார்.'இவரது வெற்றிசெல்லாது' என அறிவிக்க கோரி, சென்னை உயர் நீதி

மன்றத்தில், தி.மு.க., வேட்பாளர் சரவணன், தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.

சாட்சியம்:

சரவணன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனு:மருத்துவமனை யில், ஜெ., சிகிச்சை பெற்ற போது, வேட்பாளராக போஸ் போட்டியிட வும், அவருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும், சில படிவங்களில், ஜெ.,வின் கைரேகை பெறப்பட்டு, கமிஷனிடம் அளிக்கப் பட்டது.

அதை, சென்னை, அரசு பொது மருத்துவமனை டாக்டர் பாலாஜி, சான்றொப்பம் செய்துள்ளார். டாக்டர் பாலாஜியை நியமித்தது குறித்தும், ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும், சுகாதாரத் துறை செயலர் ஆஜராகி, சாட்சியம் அளிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டது.

இந்த தேர்தல் வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, வேட்பாளரை யும், இரட்டை இலை சின்னத்தையும் அங்கீகரித்து அளித்த படிவங்களில், ஜெ., பதிவு செய்த கைரேகை உண்மையா என்பது குறித்து, தேர்தல் ஆணைய

Advertisement

முதன்மை செயலர், வில்ப்ரெட் ஆஜராகி, சாட்சியம்அளிக்கும்படி, நீதிபதி உத்தர விட்டார்.இதையடுத்து, இவ் வழக்கில், நேற்று, தேர்தல் ஆணைய முதன்மை செயலர், வில்ப்ரெட் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம், சரவணன் தரப்பு வழக்கறிஞர் அருண்,கேள்விகள் எழுப்பினார்.

மதுசூதனன் கடிதம்:


வில்ப்ரெட் கூறியதாவது: வேட்பு மனுவில் உள்ள ஜெயலலிதாவின் கைரேகையை ஏற்றுக் கொள்ளும்படி, கட்சியின் அவைத் தலைவர், மதுசூதனன் கடிதம் எழுதி னார்; அதன்படி, வேட்பு மனு ஏற்கப்பட்டது. அந்த கடிதத்துடன், ஜெ.,வின் மருத்துவ அறிக்கை இணைக்கப்பட வில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

கடிதம் அனுப்ப, மதுசூதனனுக்கு அங்கீகாரம் அளித்தது யார் என்பதை, தேர்தல் ஆணையம் சரிபார்த்ததா என்ற கேள்விக்கு, 'அந்த கடிதம் உண்மையானது என, நாங்கள் நம்பினோம்' என,முதன்மை செயலர் பதில் அளித்தார். இதை அடுத்து, ஜெ., கைரேகைக்கு சான்றொப்பம் அளித்த டாக்டர் பாலாஜி, வரும், 27ம் தேதி ஆஜராகும்படி, நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prem - chennai,இந்தியா
14-அக்-201716:21:05 IST Report Abuse

Premஜெ.வின் கொலைக்கு முக்கிய காரணமான சசிகலா குடும்பத்தை கூண்டாக பிடித்து சிறையில் அடைக்க வேண்டும்

Rate this:
Jeeva - virudhunagar,இந்தியா
14-அக்-201714:59:34 IST Report Abuse

Jeeva Maruthuvarar unmaiyai solluvar avar kuripidathu unmai endraal ?

Rate this:
shekaran - thiruchi,இந்தியா
14-அக்-201714:40:05 IST Report Abuse

shekaranநீதி விசாரணையிலையே உண்மை புலப்படும்

Rate this:
niki - Chennai,இந்தியா
14-அக்-201714:27:59 IST Report Abuse

nikiunmai enna enpathu visaaranai mudivil theriya varum

Rate this:
Sundaram - Thanjavur,இந்தியா
14-அக்-201714:16:32 IST Report Abuse

Sundaramunmai orunaal sattathin mun nirubikapadum ..

Rate this:
பொலம்பஸ் - CHENNAI,இந்தியா
14-அக்-201709:42:35 IST Report Abuse

பொலம்பஸ்டாக்டர் பாலாஜியைஆமாம் போட வைத்தவர்களுக்கு இந்த நீதிபதியையும் ஆமாம் போட வைக்க எவ்வளவு வேண்டுமானாலும் தருவார்கள் அல்லது மிரட்டுவார்கள்.. ....மதிசூதனன்..... எழுதியதாக சொல்லப்படும் கடிதத்தின் இன்னொரு காப்பியை நீதிபதிக்கும் அனுப்பஎவ்வளவு நேரமாகப்போகிறது. பிணத்தையும் ஏமாற்றும் கலை திராவிடகட்சிகளின் கைவண்ணம்.

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
14-அக்-201708:07:01 IST Report Abuse

தேச நேசன் பிறவி பச்சைத்திராவிடரான பாலாஜி மீது புகார் வழக்கு என்பது ஆரிய சதிதான்

Rate this:
ramasamy naicken - Hamilton,பெர்முடா
14-அக்-201709:14:27 IST Report Abuse

ramasamy naickenமத வெறியோடு இப்போது ஜாதி வெறியும் சேர்ந்து விட்டதா?...

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-அக்-201707:32:04 IST Report Abuse

Kasimani Baskaranகோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும் பொழுது தைரியமாக இது போல ஒன்றுக்கும் உதவாத வழக்குகளை நீதிமன்றம் விசாரித்து நீதியை கொலை செய்கிறது.. எல்லாம் சரியாக இருந்தாலும் கூட அநீதித்துறை இந்தியாவை முன்னேற விடாது...

Rate this:
ramasamy naicken - Hamilton,பெர்முடா
14-அக்-201709:16:44 IST Report Abuse

ramasamy naickenபாருங்கடா, பாலாஜிக்கு ஆப்பு அடித்துவிட போகிறார்க்ளோ என்ற பயம் இவருக்கு வந்துவிட்டது....

Rate this:
கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா
14-அக்-201702:24:04 IST Report Abuse

கும்புடுறேன் சாமிஜெயலலிதா உயிரோடு இருதப்பத்தான் கோர்ட்டு கேஸுன்னு அலைஞ்சாங்க இப்போ இறந்த பின்னாடியும் கோர்ட்டு கேஸுன்னு இருந்தா எப்படி ? இப்படி ஒரு கட்சி தேவையா இந்த நாட்டுக்கு ?

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement