போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் விற்பனை வீட்டு வசதி வாரியத்தில் ரூ.500 கோடி மோசடி Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் விற்பனை
வீட்டு வசதி வாரியத்தில் ரூ.500 கோடி மோசடி

தமிழக வீட்டு வசதி வாரியத்தின் பல்வேறு கோட்டங்களில், 500 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள், போலி ஆவணங்கள் வாயிலாக, முறைகேடாக விற்கப்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உயர் அதிகாரிகள் அலட்சியத்தால், இந்த வழக்குகள் மூடி மறைக்கப்படுவதாக வும் கூறப்படுகிறது.

போலி ஆவணங்கள்,Fake Documents,  நிலம் விற்பனை , Land Sale, வீட்டு வசதி வாரியம்,Housing Board, தமிழகம், Tamilnadu,  சென்னை,Chennai, கே.கே. நகர் , KK Nagar, தாம்பரம், Tambaram, அரும்பாக்கம், Arumbakkam, துணை முதல்வர் பன்னீர்செல்வம், Deputy Chief Minister Panneerselvam,  விசாரணை, Investigation,

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும், அவர்களின் வாங்கும் திறனுக்குள், வீடுகள், மனைகள் பெறுவதற்காக, வீட்டுவசதி வாரியம் துவக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும், நிலம் கையகப்படுத்தப்பட்டு, திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், குறிப்பிட்ட அளவு நிலங்கள், எதிர்கால

தேவைகளுக்காக இருப்பு வைக்கப்பட்டன.
இத்தகைய நிலங்கள் தொடர்ந்து, பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளன. இந்த நிலங்களை, அந்தந்த கோட்ட அலுவலகங்களில் உள்ள அதிகாரிகள், போலி ஆவணங்கள் தயாரித்து,
விற்று, மோசடி செய்ததாககுற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து, உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பல்வேறு தகவல்கள் கிடைத்தா லும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது குறித்து, வீட்டுவசதி வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னையில், கே.கே. நகர் கோட்டத்தில், தாம்பரம், அரும்பாக்கம், கே.கே.நகர் போன்ற பகுதி களில், யாருக்கும் ஒதுக்காத, 130 மனைகள் போலி ஒதுக்கீட்டு ஆணைகள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதில், ஒரு பகுதி மோசடி குறித்து, வீட்டு வசதி வாரியநிர்வாகம், துறை ரீதியாக நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் அடிப்படை யில், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நிர்வாக இயக்குனர் மாற்றத்துக்கு பின், இந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதேபோல, ஓசூர், கோவை மற்றும் மதுரை கோட்டங்களிலும்,

Advertisement

நிலமோசடி நடந்தது குறித்த பூர்வாங்க தகவல்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இந்த மோசடிகளில், அபகரிக்கப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பு, தற்போதைய நிலவரப்படி, 500 கோடி ரூபாய் வரை என, மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கோப்புகளை அழித்து விட்டதால், இதில், மேலதிகாரிகள் துணையுடன், வழக்குகள் மூடி மறைக்கப்படுகின்றன. துணை முதல்வர், பன்னீர்செல்வம் தலையிட்டு, விசாரணைக்கு உத்தரவிட்டால், வாரியத்தின் சொத்துக்கள் மீட்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pattu Maami - Mambalam, Chennai,இந்தியா
14-அக்-201713:49:34 IST Report Abuse

Pattu MaamiGovernment plots it self sale by forgery?Very worst fellows. May be Sasi and Dina behind this forgery. Please make enquiry commission.

Rate this:
rajj - Thanjavur,இந்தியா
14-அக்-201711:37:50 IST Report Abuse

rajjதமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும், அவர்களின் வாங்கும் திறனுக்குள், வீடுகள், மனைகள் பெறுவதற்காக, வீட்டுவசதி வாரியம் துவக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும், நிலம் கையகப்படுத்தப்பட்டு, திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. உண்மைதான். இவர்களை போல துரித நடவடிக்கை எடுக்க அரசு எந்திரத்தில் ஆள் இல்லை. இவர்களின் துரித நடவடிக்கையால் வீடு வாங்கியவர்கள் நிலையோ பரிதாபம் எப்பொழுது வட்டி அசல் கேட்ப்பார்கள் என தெரியாது இவர்கள் போடும் கணக்கு இவர்களுக்கே தெரியாது. இவர்களிடம் வீடு வாங்கியவர்களிடம் கேட்டால் தான் உண்மை நிலை புரியும் இவர்களிடம் கணக்கை முடித்து வீட்டின் பத்திரம் வாங்குவதற்குள் ...................???????????????????????????

Rate this:
kuruvi - chennai,இந்தியா
14-அக்-201711:27:18 IST Report Abuse

kuruviதமிழண்டா...கபாலிடா...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-அக்-201709:11:11 IST Report Abuse

Srinivasan Kannaiyaஎழுபதுகளுக்கு முன்பு போளி என்றால் உண்ணும் ஒருவகையான இனிப்பு வகை சின்ன தோசை என்று மக்களுக்கு தெரியும்... இப்பொழுது போலி என்றால் திராவிடரகளால் மற்றவர்கள் சொத்தை அபகரிக்க உண்டாக்கப்பட்ட ஒரு கருவி ஆகும்...இதை தெள்ள தெளிவாக பார்ப்பன அஹ்ரகாரத்தில் இருக்கும் தியாகிக்கு அதிகமாகவே தெரியும்...

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-அக்-201719:51:17 IST Report Abuse

Kasimani Baskaranஅய்யய்யோ... ஓமானில பிள்ளை போளிக்கு ஏங்கிக்கொண்டு இருக்கிறது போல......

Rate this:
ramasamy naicken - Hamilton,பெர்முடா
14-அக்-201708:28:41 IST Report Abuse

ramasamy naickenஇந்த துறைக்கு ஒரு முந்திரி, செயலர், என்ஜினீயர், என்று ஏகப்பட்ட அதிகாரிகள். உருப்படியாக செய்த வேலை நல்லா இருந்த ஏரி, குளங்களை தூர்த்து அதில் உள்ள செய்து மட்டமான வீடுகளை கட்டியதுதான். இந்த துறையை இழுத்து மூடினால் ஊழல் குறையும்.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-அக்-201707:38:03 IST Report Abuse

Kasimani Baskaranஇதெல்லாம் ஒரு ஊழலே இல்லை என்று பகுத்தறிவுப்பண்டாரங்கள் மார்தட்டுவார்கள்...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement