பன்னீர் அணி செம்மலை : உச்ச நீதிமன்றத்தில் மனு| Dinamalar

பன்னீர் அணி செம்மலை : உச்ச நீதிமன்றத்தில் மனு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: பன்னீர்செல்வம் அணியின், 12 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., தொடர்ந்த வழக்கை, உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என, செம்மலை எம்.எல்.ஏ., நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.
தினகரன் ஆதரவு, 18 எம்.எல்.ஏ.,க்களை, சபாநாயகர் தனபால், தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து, தினகரன் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க., கொறடா உத்தரவை மீறி செயல்பட்ட, பன்னீர்செல்வம் அணியின், 12 எம்.எல்.ஏ.,க்களையும், தகுதி நீக்கம் செய்யும்படி, தி.மு.க., சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில், சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை, உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி, பன்னீர் அணியை சேர்ந்த, எம்.எல்.ஏ., செம்மலை, நேற்று மனுத்தாக்கல் செய்தார். அதில், 'சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்து விசாரிக்கும் அதிகாரம், உச்ச நீதிமன்றத்திற்கே உள்ளது. வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.