திண்டுக்கல்லில் திருப்பூர் சாயக்கழிவுகள் : 3 பேர் கைது| Dinamalar

திண்டுக்கல்லில் திருப்பூர் சாயக்கழிவுகள் : 3 பேர் கைது

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
திண்டுக்கல்ல்,Dindigul,திருப்பூர் ,Tirupur, சாயக்கழிவுகள், Dye waste,கைது ,arrest,  சக்திவேல் எஸ்.பி, Sakthivel SP,

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் திருப்பூர் சாயக்கழிவுகளை கொட்டிய 2 புரோக்கர்கள் மற்றும் டிரைவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பித்தளைப்பட்டிக்கும், என். பஞ்சம்பட்டிக்கும் இடையே புதர் பகுதிகளில் இரவில் லாரியில் இருந்து மூடைகளை இறக்கியுள்ளனர்.

பத்து டன் கழிவுகள் : இதில் சந்தேகமடைந்த தாடிக்கொம்பு எஸ்.ஐ., ரெம்சியா தலைமையிலான போலீசார் லாரியை சோதனை செய்தனர். லாரியில் இருந்து திருப்பூர் சாயக்கழிவுகள் இறக்கப்பட்டது தெரிந்தது. மேலும் அந்த பகுதியில் 10 டன் அளவிற்கு கழிவுகள் ஆங்காங்கே குவிக்க வைக்கப்பட்டதும் தெரிய வந்தது. இதனால் அப்பகுதியில் நிலத்தடிநீர் மாசுபடுவதோடு, துர்நாற்றமும் வீசியது. புதுக்கோட்டையை சேர்ந்த டிரைவர் மோகனை,44, போலீசார் விசாரித்தனர். அப்போது தப்பிச் செல்ல முயன்ற புரோக்கர்கள் திண்டுக்கல் மேட்டுப்பட்டி ரகுரமான்,34, ஜான்பால்,34, ஆகியோரையும் பிடித்தனர்.

ஒரு லோடு ரூ.10 ஆயிரம் : திருப்பூரில் உள்ள சாயக்கழிவுகளை திண்டுக்கல்லில் கொட்டுவதற்கு இடம் தேர்வு செய்வதற்கு புரோக்கர்களாக ரகுராமனும், ஜான்பாலும் செயல்பட்டுள்ளனர். இவர்கள் பகலில் கழிவுகள் கொட்டுவதற்கு இடம் தேர்வு செய்வார்கள். இரவில் கழிவுகளை கொட்டுவார்கள். இதற்கு ஒரு லோடுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சக்திவேல் எஸ்.பி., கூறியதாவது: திண்டுக்கல்லில் சாயக்கழிவுகளை கொட்டிய 3 பேரை கைது செய்துள்ளோம். திருப்பூர் மில்லின் உரிமையாளர்களையும், வழக்கில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாரும் தப்ப முடியாத வகையில் வழக்குப்பதிவு செய்துள்ளோம், என்றார்.

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-அக்-201708:48:29 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் லஞ்சம் கொடுத்து ஜாமீனில் வந்து இதை தொடர்வார்கள். ஜட்ஜி ஐயா இவங்களுக்கு 500 ஓவா அபராதம் போடுவாரு. வாழ்க இந்திய பீனல் கோடு.. இந்தியாவுக்கு வந்த கேடு அது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.