மெட்ரோ பணியால் வீடுகளில் விரிசல் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு எப்போது?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மெட்ரோ பணியால் வீடுகளில் விரிசல் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு எப்போது?

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை : மெட்ரோ ரயில் போக்குவரத்தால், திரு.வி.க., நகர் பகுதியில், வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.சென்னை விமான நிலையம் - நேரு பூங்கா இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து, மே 14ம் தேதியில் இருந்து நடந்து வருகிறது. இந்த வழியில், ஷெனாய்நகரில், திரு.வி.க., நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளுக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.நான்கு ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் சுரங்கப்பாதை அமைத்தபோது, சில வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. மெட்ரோ ரயில் நிர்வாகம் சரி செய்தது. இதன் பின், சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு, ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இந்நிலையில், சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் கடந்து செல்வதால், அதிர்வு ஏற்பட்டு, சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ரயில் செல்லும் போது, வீடுகள் அதிர்கிறது எனவும், பகுதி வாசிகள், மெட்ரோ ரயில் நிர்வாகத் திற்கு புகார் கூறினர்.மெட்ரோ ரயில் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, சில மாதங்களுக்கு முன், ஐ.ஐ.டி., நிபுணர்களை அனுப்பி, வீடுகளில் விரிசல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வறிக்கை தாக்கல் செய்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. தற்போது வரை, மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் இருந்து, பதில் இல்லை.வீடுகளில் விரிசல் நீண்டு, நீர்கசிவு மேலும் அதிகமாகியுள்ளது. பருவ மழை துவங்கினால்,நீர் கசிவு அதிகமாகிவிடும் என, வீடுகளில் உள்ளோர் புலம்புகின்றனர்.இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விரிசல் குறித்து, ஐ.ஐ.டி., நிபுணர்கள் ஆய்வு செய்தபோது, மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் சென்ற போது, மேற்பகுதியில் அதிர்வுகள் இல்லை என, கண்டறியப்பட்டுள்ளது. 'இன்னும் முழுமையான ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை