ஆர்.கே.நகரில் போட்டியில்லை: விஜயகாந்த் அறிவிப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆர்.கே.நகரில் போட்டியில்லை: விஜயகாந்த் அறிவிப்பு

Added : அக் 13, 2017 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
விஜயகாந்த்,Vijayakanth, ஆர்.கே.நகர், RK Nagar, இடைத்தேர்தல், by Election,தே.மு.தி.க.,DMDK, சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, Chennai Stanley Hospital,டெங்கு காய்ச்சல், Dengue fever, அமைச்சர் விஜயபாஸ்கர் ,Minister Vijayapaskar,  சென்னை,Chennai,

சென்னை: ''டிசம்பருக்குள், ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தால், தே.மு.தி.க., போட்டியிடாது,'' என, அக்கட்சியின் தலைவர், விஜயகாந்த் கூறினார்.

சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில், 'டெங்கு' காய்ச்சலுக்கு, சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து, தே.மு.தி.க., தலைவர், பல்வேறு உதவிகளை வழங்கினார்.

பின், அவர் கூறியதாவது: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு, 2,000 ரூபாய் வழங்குவதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இது போதாது; கூடுதல் நிதி வழங்க வேண்டும். டெங்குவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, இழப்பீடு தர வேண்டும். மருத்துவமனைக்கு நான் வந்ததால், துப்புரவு பணிகளை சரியாக செய்து, சுகாதாரமாக வைத்துள்ளனர். இது போல, எல்லா நாளும், எல்லா நேரமும், சுகாதாரமாக பராமரித்தால், டெங்குவை முற்றிலும் ஒழிக்க முடியும். எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை விட, டெங்கு ஒழிப்பே முக்கியம். எனவே, இப்பணியில், அரசு அக்கறை செலுத்த வேண்டும். டெங்குவால், இந்த ஆட்சி கவிழ வாய்ப்புள்ளது. எனவே, டிச., மாதத்திற்குள், ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தால், தே.மு.தி.க., போட்டியிடாது. மீண்டும், பொதுத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
15-அக்-201712:39:04 IST Report Abuse
Tamizhan kanchi இரும்பு அடிக்கிற இடத்தில ... ஈ -ய்க்கு என்ன வேலை...........
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
14-அக்-201713:38:48 IST Report Abuse
A.George Alphonse "Aalley Elladha Tea Kadaiel Evar Yarukkaga Tea Aaththugirar "pole there is no use of his party in our state at present. He don't find any candidate to contest either in R.K.Nagar byelection or in coming assemply election if it comes any time in our state in future.
Rate this:
Share this comment
Cancel
Vel - Chennai,இந்தியா
14-அக்-201711:05:48 IST Report Abuse
Vel மருத்துவமனைக்கு நீங்கள் வந்ததால், துப்புரவு பணிகளை சரியாக செய்து, சுகாதாரமாக வைத்துள்ளனர். இது போல, எல்லா நாளும், எல்லா நேரமும், சுகாதாரமாக பராமரித்தால், டெங்குவை முற்றிலும் ஒழிக்க முடியும். இதே மாதிரி கட்சியை நீங்கள் சரியாக கவனிக்காவிட்டால் தே.மு.தி.க ஒழிந்துவிடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை