நடிகர் சந்தானத்திற்கு நிபந்தனை முன்ஜாமின்| Dinamalar

நடிகர் சந்தானத்திற்கு நிபந்தனை முன்ஜாமின்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: மிரட்டல் வழக்கில், நடிகர் சந்தானத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம், நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உள்ளது. உயர் நீதிமன்றத்தில், நடிகர் சந்தானம் தாக்கல் செய்த மனு:
எனக்கு எதிராக, சண்முகசுந்தரம் என்பவர், வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார். அவரை, நான் தாக்கியதாகவும், மிரட்டியதாகவும் கூறியுள்ளார்; அவரது புகார் பொய்யானது. கட்டடம் கட்ட, என்னிடம் வாங்கிய பணத்தை திருப்பி தரவில்லை; கட்டுமான பணிகளையும் துவங்கவில்லை. பலமுறை கேட்டும், பணத்தை தர அவகாசம் கேட்டார். பேச்சு நடத்த வரும்படி தொலைபேசியில் அழைத்தார். அதை நம்பி, நான் அவரது அலுவலகம் சென்றேன். அங்கு, சண்முகசுந்தரமும், அவரது அடியாட்களும் என்னை தாக்கினர்; காயப்படுத்தினர்.
இது குறித்து, நான் அளித்த புகாரில், வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதற்கு பதிலடியாக, எனக்கு எதிராக, புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர். எனக்கு, முன்ஜாமின் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனு, நீதிபதி, ஆதிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. சந்தானத்துக்கு முன்ஜாமின் வழங்கி, நீதிபதி உத்தரவிட்டார். இரு வாரங்களுக்கு, வளசரவாக்கம் போலீசில், சந்தானம் ஆஜராகும்படி, நிபந்தனை விதிக்கப்பட்டது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Meenu - Chennai,இந்தியா
14-அக்-201712:14:31 IST Report Abuse
Meenu எனக்கென்னவோ சந்தானம் சொல்லுவது சரி என்று தோன்றுகிறது. சந்தானம் ஒரு நடிகர் அவரிடம் நிறைய பணம் இருக்கும் அதனால் அவருக்கு ஏன் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்ற மனிதனின் இயல்பான எண்ணத்தில் தான் செய்திருப்பார்கள் என்று நம்மால் யூகிக்க முடிகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.