ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 'ஸ்டிரைக்' கூடாது : உயர் நீதிமன்றம் உத்தரவு | Dinamalar

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 'ஸ்டிரைக்' கூடாது : உயர் நீதிமன்றம் உத்தரவு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: அவசர சேவையில் உள்ள ஆம்புலன்ஸ் ஊழியர்கள், போராட்டத்தில் ஈடுபட, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அவசர தேவையின் போது, ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்ட மறுத்தால், தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும், எச்சரித்துள்ளது.
சென்னை எழும்பூரை சேர்ந்த, வழக்கறிஞர் பேட்ரிக் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில், 32 மாவட்டங்களிலும், 684 வாகனங்கள், ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபட்டுள்ளன. இந்த வாகனங்களை, தனியார் நிறுவனம் இயக்குகிறது. '108' ஆம்புலன்ஸ் சேவைக்காக, தினமும், 90 ஆயிரம் அழைப்புகள் வருகின்றன. அவற்றில், ௭,௦௦௦ அழைப்புகள் அவசர தன்மை உடையவை. '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம், பதிவு செய்யப்பட்டது. இந்த சங்கம், தற்போது போராட்டத்தை அறிவித்துள்ளது.
வரும், 17ம் தேதி இரவு, 8:00 மணி முதல், 18ம் தேதி தீபாவளியன்று இரவு, 8:00 மணி வரை, ஒரு நாள் போராட்டத்தை அறிவித்துள்ளது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், காலவரையற்ற போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 'அனைத்து ஊழியர்களுக்கும், 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும்' என்றும், சங்கம் வலியுறுத்தி உள்ளது.
ஆம்புலன்ஸ் ஊழியர்களின் போராட்ட அறிவிப்பால், சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். தீபாவளி பண்டிகையை ஒட்டி, தீ விபத்துகள், மோட்டார் வாகன விபத்துகள் ஏராளமாக நடக்கும். காயம் அடைந்தவர்களை, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால், ஆம்புலன்ஸ் சேவை அவசியம். ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பண்டிகை காலத்தை பயன்படுத்தி, சாதாரண மக்களை கஷ்டத்திற்கு ஆளாக்கக் கூடாது.
ஊழியர்கள், தீபாவளி பண்டிகையின் போது, போராட்டங்களை அறிவிக்கின்றனர். ௨௦௧௪, ௨௦௧௬ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட போராட்டங்களுக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்தது. தற்போதைய போராட்ட அறிவிப்பால், பொது மக்கள் மிகவும் பாதிக்கப்படுவர். குறித்த நேரத்தில் சிகிச்சை பெற்றால் தான் உயிரிழப்பு தவிர்க்கப்படும். மருத்துவமனைக்கு, உடனடியாக எடுத்து செல்வது தவறினால், அந்த பொன்னான நேரம் கடந்து விடும்.
எனவே, ஆம்புலன்ஸ் ஊழியர்கள், தீபாவளியன்று நடத்தும் போராட்டத்திற்கு, தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
ஆம்புலன்ஸ் ஊழியர்கள், போராட்டத்தில் ஈடுபட தடை விதிக்கப்படுகிறது. அவசர சிகிச்சைக்காக, ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும் போது, சங்க உறுப்பினர்கள், கடமை ஆற்றாமல் இருக்கக் கூடாது.
அவசர நேரத்தில், ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்க மறுத்தால், பணிக்கு வராமல் இருந்தால், நீதிமன்ற அவமதிப்புக்கான தண்டனை உள்ளிட்ட, விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.