தப்பியது 'மெர்சல்'| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தப்பியது 'மெர்சல்'

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை: விஜய் நடித்த, 'மெர்சல்' பட தலைப்புக்கு தடை விதிக்க மறுத்ததை எதிர்த்து, தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை, வில்லிவாக்கத்தை சேர்ந்த, ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலில், 'மெர்சலாயிட்டேன்' என்ற தலைப்பு, என் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ௨௦௧௬ ஆகஸ்ட்டில், படப்பிடிப்பு துவங்கி விட்டது. இந்நிலையில், 'மெர்சல்' தலைப்பில், விஜய் நடிப்பதாக, விளம்பரம் வெளியானது. இந்த படத்தை, 'தேனாண்டாள் பிலிம்ஸ்' தயாரிக்கிறது. 'மெர்சலாயிட்டேன், மெர்சல்' என்ற தலைப்புகள், உச்சரிப்பில் ஒரே மாதிரியாக இருக்கும். இந்த இரண்டு தலைப்புகளிலும், படங்கள் வெளியானால் குழப்பம் ஏற்படும். எனவே, 'மெர்சல்' என்ற தலைப்பை, தேனாண்டாள் பிலிம்ஸ் பயன்படுத்தக் கூடாது; அதற்கு, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை, நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். தடை கோரிய மனுவை, தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை, நீதிபதிகள் ராஜிவ் ஷக்தர், சதீஷ்குமார் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. 'மேல்முறையீட்டு மனுவில் தகுதியில்லை; தனி நீதிபதி சரியாக முடிவு செய்துள்ளார். மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது' என, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையில், சட்டவிரோதமாக இணையதளங்களில், 'மெர்சல்' படத்தை பதிவேற்றம் செய்ய தடை கோரி, தேனாண்டாள் பிலிம்ஸ் தரப்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த, நீதிபதி அனிதா சுமந்த், இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய தடை விதித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை