தனியார் மருத்துவ மாணவர்கள் பிரச்னை : சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் பெற அறிவுரை| Dinamalar

தனியார் மருத்துவ மாணவர்கள் பிரச்னை : சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் பெற அறிவுரை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு மாற்ற கோரிய வழக்கில், உச்ச நீதிமன்றத்தை அணுகி விளக்கம் பெறும்படி, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகேயுள்ள, அன்னை மருத்துவக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு முடித்த, ௧௪௦க்கும் மேற்பட்ட மாணவர்கள், தங்களை அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு மாற்றக்கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளாததால், புதிதாக மாணவர்களை சேர்க்க, மருத்துவ கவுன்சில், இந்த கல்லுாரிக்கு தடை விதித்தது.
அரசு மருத்துவக்கல்லுாரிக்கு மாற்ற கோரிய மனுவை, நீதிபதி, கிருபாகரன் விசாரித்தார்.
மருத்துவ கல்லுாரியில், வழக்கறிஞர்கள் எனக்கூறி, கறுப்பு, வெள்ளை உடையுடன் சிலர் இருப்பதாக, புகைப்படங்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இதையடுத்து, அறிக்கை அளிக்கும்படி, காஞ்சிபுரம் மாவட்ட போலீசுக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.
நேற்று, விசாரணைக்கு வந்த போது, காஞ்சிபுரம், எஸ்.பி., அறிக்கை தாக்கல் செய்தார். நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:
காஞ்சிபுரம், எஸ்.பி., அறிக்கையை பார்க்கும் போது, கல்லுாரியை நடத்தும் அறக்கட்டளையின் பழைய, புதியஅறங்காவலர்கள் தரப்புக்கு, நீதித்துறை மற்றும் போலீஸ் மீது நம்பிக்கை இல்லை என்பது தெரிகிறது.அதனால் தான், கறுப்பு, வெள்ளை உடை அணிந்த, வழக்கறிஞர்கள் எனக்கூறி கொள்பவர்களை, இரு தரப்பினரும் ஏற்பாடு செய்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவை விளக்குவதற்காக, இரு தரப்பிலும் சில வழக்கறிஞர்கள் சென்றதாக கூறப்பட்டுள்ளது.அந்த வழக்கறிஞர்களை தவிர, புகைப்படத்தில் இருக்கும் மற்றவர்களை தான், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு குறை கூற
வேண்டும்.
எந்தெந்த வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்தனர் என்பது குறித்து, இரு தரப்பும், மனு தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், அனைத்து அறங்காவலர்களுக்கு எதிராகவும், குறிப்பிட்ட வழக்கறிஞர்களை தவிர்த்து, மற்றவர்களுக்கு எதிராகவும், வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
இந்த மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்த மாணவர்களை, படிப்பில் தொடர அனுமதிக்கும்படி, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.அரசு தரப்பில் ஆஜரான, அட்வகேட் ஜெனரல், விஜய் நாராயண், 'மருத்துவக் கல்லுாரிக்கு வழங்கிய அத்தியாவசிய சான்றிதழை, அரசு ரத்து செய்து விட்டது.
'அது பற்றி, உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வராமல், பழைய அறங்காவலர்கள் உத்தரவு பெற்றுள்ளனர்' என்றார்.
ஆனால், சான்றிதழை ரத்து செய்த விபரம், தங்களுக்கு தெரியாது என, அறங்காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய சூழலில், மருத்துவ கவுன்சில் வழக்கறிஞர், வி.பி.ராமன், மத்திய அரசு வழக்கறிஞர், ரபு மனோகர், உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் பெறுவதாக தெரிவித்தனர்.
மாணவர்கள் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், சிராஜுதீனும், உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கூறினார். எனவே, உச்ச நீதிமன்றத்தில், இவர்கள் முறையிடலாம்.
தற்போது, அன்னை மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் நிர்வாகம், பழைய அறங்காவலர்கள் வசம் உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள வழக்கின் முடிவை பொறுத்து, இது அமையும். விசாரணை, வரும், ௨௪ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.