பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி

Added : அக் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

தேனி, தேனியில் தீயணைப்புத் துறை, வருவாய்த் துறையின் சார்பில், தேசிய பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு, வடகிழக்கு பருவமழை
பேரிடர்கால முன் எச்
சரிக்கை நடவடிக்கைகள், தீபாவளி பண்டிகை தின பாதுகாப்பு குறித்து
விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தேனி --- பெரியகுளம் ரோட்டில் உள்ள பி.சி., கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய
ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் துவக்கிவைத்தார்.
தேனி தாசில்தார் ேஷக் அயூப், தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி, பள்ளி முதல்வர் ஜெரால்டின் வனிதா
உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி மாணவிகள்
ஏராளமானோர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். ஊர்வலம் பெத்தாட்சி விநாயகர் கோயில் வரை சென்று மீண்டும் பள்ளிக்கு வந்து நிறைவடைந்தது.
* லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்புத்துறை சார்பில் மாணவர்களுக்கு பேரிடர் கால பாதுகாப்பு நடைமுறைகள், தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து, விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன், தாசில்தார் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தனர். பின், விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் நடந்தது. பேரிடர் கால பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. அரிமா சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
போடி:போடி ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு விழா, பள்ளி தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமையில் நடந்தது. செயலாளர் அய்யப்பராஜன், தலைமையாசிரியர் குமார், தாசில்தார் ராணி, தீயணைப்பு துறை அலுவலர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். உதவி தலைமையாசிரியர் சங்கிலிக்காளை வரவேற்றார்.
தீ தடுப்பு மற்றும் பேரிடர்மேலாண்மை குறித்து தீயணைப்பு துறையினர் மாணவ, மாணவிகளுக்கு செய் முறை விளக்கம்அளித்தனர்.
பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வுக்கான கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டிகள் நடந்தன. ெற்றி பெற்றவர்
களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன,

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை