மலைவாழ் மக்களுக்கு எல்.இ.டி., பல்பு வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மலைவாழ் மக்களுக்கு எல்.இ.டி., பல்பு வழங்கல்

Added : அக் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல், திண்டுக்கல் மலைவாழ் மக்களின் வீடுகளுக்கு 'எல்.இ.டி.,' பல்பு வழங்கப்பட உள்ளது.
கொடைக்கானல், சிறுமலையில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் மின்சார வசதி ஏற்படுத்தி மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அடர்ந்த வனப் பகுதியில் மின்சார வசதி ஏற்படுத்தவில்லை. அங்கு, மின் இணைப்பு வழங்குவதில் சிரமம் இருப்பதோடு, வனத் துறையின் அனுமதி பெறுவதும் கட்டாயம்.
அடர்ந்த காடுகள் வழியே மின்
சாரத்தை கொண்டு செல்கையில், மின் விபத்து எதுவும் ஏற்பட்டால் காடுகள், அதில் வசிக்கும் விலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இருப்பினும் பல நுாறு ஆண்டுகளாக வனப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் மின்சார வசதி கேட்டு நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு சோலார் பேனல்கள் மூலம் மின்சார வசதியை ஏற்படுத்த மின்வாரியத்தில் முடிவு செய்து அதற்கான பணிகள் நடந்து வருகிறது. கொடைக்கானல், சிறுமலையில் மின் இணைப்பு இல்லாத வீடுகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
முதற்கட்டமாக, 5 வாட் வீதம் ஒரு
வீட்டுக்கு 3 எல்.இ.டி., பல்புகள் வழங்கவும், பல்பு தயாரிக்க நிறுவனங்களுக்கு டெண்டரும் அறிவிக்கப்
பட்டுள்ளது. பல்புகள் தயாரானதும் வீடுகளுக்கு வழங்கப்படும் என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.------

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை