பூட்டை உடைத்து 8 பவுன் கொள்ளை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூட்டை உடைத்து 8 பவுன் கொள்ளை

Added : அக் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேடசந்துார், வேடசந்துார் அருகே தோட்டத்து வீட்டில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 9 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
வேடசந்துார் அருகே ஸ்ரீராமபுரம் தெற்கு தோட்டத்தை சேர்ந்தவர் வையாபுரி,59. மனைவி செசல்லம்மாள்,55, தந்தை கருப்பணகவுண்டருடன்,90 தோட்டத்து வீட்டில் வசிக்கிறார். காலையில் அனைவரும் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டின் வெளி கேட் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் பீரோவை கம்பியால் நெம்பி உடைத்துள்ளார். அதில் இருந்த செயின், பிரேஸ்லெட், மோதிரம் உள்ளிட்ட
எட்டரை பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றார்.
திருடு போனது குறித்து அறிந்ததும், போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணருடன் சென்று சோதனை நடத்தினர்.
வையாபுரி கூறுகையில், ''நாங்கள் வீட்டுக்கு சாப்பிட வந்தபோது, வீட்டு திண்ணையில் இருந்து ஒருவர் வந்தார். மின் கட்டண ரீடிங் எடுக்க வந்திருப்பார் என நினைத்தோம். பின்னரே திருடு போனது
தெரிந்தது.
அவரை துரத்தினோம். ஏற்கனவே இருசக்கர வாகனத்தில் இருவர் ரோட்டில் தயாராக இருக்க, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபரும் அந்த வாகனத்தில் ஏறி தப்பிவிட்டார், என்றார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை