துப்பாக்கியுடன் திரிந்தவர்களிடம் போலீஸ் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துப்பாக்கியுடன் திரிந்தவர்களிடம் போலீஸ் விசாரணை

Added : அக் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கொடைக்கானல், - கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பேத்துப்பாறை பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த இருவரிடம் போலீசார்
விசாரணை நடத்தினர்.
பழநி செல்லும் பிரதான ரோட்டில் பேத்துப்பாறை கிராமம் உள்ளது. இப்பகுதியில் பலர் பங்களா மற்றும் எஸ்டேட் வைத்துள்ளனர். இப்பகுதியில் அரிய விலங்குகள் வசிக்கின்றன. சிலர் வன
விலங்குகளின் இறைச்சியை ருசிக்க
இரவு நேரங்களில் வேட்டையாடுவதாக தகவல்கள் வெளிவருகின்றன.
இந்நிலையில் நேற்று துப்பாக்கியுடன் இருவர் வனப்பகுதிகளில்
சுற்றி திரிவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின் பேரில் ரேஞ்சர்
ஆனந்தகுமார் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது இருவர் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்ததை அறிந்தனர்.
விசாரணையில் தஞ்சாவூர் பகுதியை சேசர்ந்த யாகப்பா 64 , அருளானந்தம் 38, என்பது தெரிந்தது. அவர்களிடமிருந்த தலா ஒரு ஏர்கன் துப்பாக்கி, ஏர் பிஸ்டல், டபுள் பேரல் கன் ஆகியவற்றை பறிமுதல்
செய்து இருவரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஏற்கனவே நக்சலைட்கள் நடமாட்டம் உள்ளதால், போலீசார தீவிரமாக விசாரிக்
கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை