கேரளாவில் கப்பல்- மீன்பிடி படகு மோதல் : குமரி மீனவர்கள் 4 பேர் மாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேரளாவில் கப்பல்- மீன்பிடி படகு மோதல் : குமரி மீனவர்கள் 4 பேர் மாயம்

Added : அக் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாகர்கோவில்: கொச்சி கடற்பகுதியில் மீன் பிடி படகு மீது கப்பல் மோதியதில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உட்பட 4 பேர் கடலில் மூழ்கி மாயமாயினர். விமானம் மற்றும் கப்பல் மூலம் தேடும் பணி நடந்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறையை சேர்ந்தவர் ஆன்டனி. இவர் கொச்சி துறைமுகத்தில் தங்கு தளமாக கொண்டு மீின்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
கடந்த 10-ம் தேதி இவரது படகில் சின்னதுறையை சேர்ந்த சேவியர் , ரம்யாஸ், நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன், கேரள மாநிலம் பூவார் ஜாண்சன், பிரின்ஸ் உட்பட 6 பேர் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.
நேற்று முன்தினம் இரவு கொச்சியில் இருந்து 50 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இந்த படகு மீது, கப்பல் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. படகு உடைந்ததில் ரம்யாஸ், ஆன்டணி, பிரின்ஸ், ஜான்சன் ஆகிய 4 பேரும் கடலில் மூழ்கி மாயினர்். மீதமுள்ள இரண்டு பேரை கடலோர காவல் படையினர் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
காணாமல் போன மீனவர்களை விமானம் மூலம் கப்பல் மூலம் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை