சுயேச்சைக்கு தடை கோரி மனு : அரசுக்கு சுப்ரீம் கோர்ட் 'நோட்டீஸ்'| Dinamalar

சுயேச்சைக்கு தடை கோரி மனு : அரசுக்கு சுப்ரீம் கோர்ட் 'நோட்டீஸ்'

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: தேர்தலில், சுயேச்சைகள் போட்டியிட தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக விளக்கம் கேட்டு, மத்திய அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும், உச்ச நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில், டில்லி மாநில, பா.ஜ., செய்தி தொடர்பாளர், அஸ்வினி குமார் உபாத்யாய், தாக்கல் செய்துள்ள மனு:
லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், தோல்வியடைவோம் என தெரிந்தும், வீண் கவுரவத்துக்காக, சுயேச்சையாக பலர் போட்டியிடுகின்றனர். இதனால், தேர்தல் முறையில், நிலையற்ற தன்மை ஏற்படுகிறது. தேர்தல் கமிஷனுக்கும், அதிக செலவு ஏற்படுகிறது.
அதனால், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், சுயேச்சையாக போட்டியிட தடை விதிக்க வேண்டும். இல்லாவிடில், கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.
தேர்தலில் ஒருவர், இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதையும், தடுக்க வேண்டும். ஒருவர், இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றால், ஒரு தொகுதியில், உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அந்த தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்துவதால், தேவையற்ற செலவு ஏற்படுகிறது.
இரண்டு தொகுதிகளில், ஒருவர் போட்டியிடுவதற்கு தடை விதிக்கும் வகையில், சட்ட திருத்தம் இயற்ற வேண்டும் என, ௨௦௦௪ம் ஆண்டிலேயே, அப்போதைய தலைமை தேர்தல் கமிஷனர் பரிந்துரைத்தார். இல்லாவிடில், மீண்டும் தேர்தல் நடத்துவதற்கான செலவை, அந்த வேட்பாளரே ஏற்க வேண்டும் என, ஆலோசனை தெரிவித்தார். இதுவரை, இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், கன்வில்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், இது தொடர்பாக நான்கு வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் மற்றும் தேர்தல் கமிஷனுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.