செம்பட்டி சந்தையில் ஆடுகள் விலை உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செம்பட்டி சந்தையில் ஆடுகள் விலை உயர்வு

Added : அக் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

செம்பட்டி, சமீபத்திய மழை, விலையில்லா ஆடு திட்ட அமல் போன்றவற்றால், செம்பட்டி சந்தையில் ஆடுகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு வரை, ஆத்துார், செம்பட்டி, சின்னாளபட்டி, கன்னிவாடி, கொடைரோடு பகுதிகளில், போதிய மழை இல்லாததால் மக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வந்தனர். கால்நடைகளுக்கு பசுந்தீவனம், வைக்கோல் கிடைக்கவில்லை.
பெரும்பாலோர், பராமரிக்க முடியாமல் கால்நடைகளை விற்கும் அவலம் ஏற்பட்டது. சமீபத்திய மழையால், கிராமங்களில் புல், பூண்டு அடர்ந்து வளர்ந்துள்ளது. மக்காச்சோள சாகுபடியும் நடக்கிறது. இதனால் விவசாயிகளிடம் கால்நடைகள் வளர்க்கும் ஆர்வம் மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவச ஆடுகள் வழங்கும் திட்டமும், மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது வாரச்சந்தைகளில் ஆடுகளின் விலை 70 சதவீதத்திற்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது.
செம்பட்டி சந்தையில், ஆத்துார், நிலக்கோட்டை, ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்களைச்சேர்ந்த பலர், நேற்று ஆடு, மாடு வாங்குவதற்காக குவிந்தனர். விலை அதிகரிப்பால், அரசு திட்டத்திற்கான நிதிஒதுக்கீட்டில் பயனாளிகளால் குறைந்த எண்ணிக்கையில்தான் ஆடுகளை வாங்க முடிந்தது.
பயனாளி பழனியம்மாள் கூறுகையில், ''கடந்தாண்டைவிட, ஆடுகளின் விலை குறைந்தபட்சம் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இலவச ஆடுகள் திட்டத்தில், அரசு ஒதுக்கீடாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளனர். விலை அதிகரிப்பு காரணமாக, 4 ஆடுகளுக்கு பதிலாக 2 ஆடுகள் மட்டுமே வாங்க முடிந்தது'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை