வாரிசுச்சான்றுக்கு கவனிப்பு: 'வாட்ஸ் ஆப்'பில் வைரலான வீடியோ| Dinamalar

வாரிசுச்சான்றுக்கு கவனிப்பு: 'வாட்ஸ் ஆப்'பில் வைரலான வீடியோ

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கன்னிவாடி, வாரிசுச்சான்றுக்கு 'கவனிப்பை' எதிர்பார்த்த வருவாய் ஆய்வாளர் பற்றிய வீடியோ, 'வாட்ஸ் ஆப்'பில் வைரலாக பரவி வருகிறது. அரசு அலுவலகங்களில் கடைநிலை ஊழியர் முதல், உயர் பதவி அதிகாரிகள் வரை, 'அன்பளிப்பு' கேட்டு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினாலும், அவ்வப்போது பலர் இப்பிரச்னையில் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது.
இதுபோன்ற அவலங்களை, அவ்வப்போது பிரபலப்படுத்துவதில் சமூக வலைதளங்கள் வரிந்து கட்டி செயல்படுகின்றன. தற்போது வாரிசுச்சான்று வழங்குவதற்காக, 'கவனிக்க' வேண்டும் என கறாராக பேசும் வருவாய் அலுவலர் ஒருவரின் வீடியோ பதிவு, தற்போது 'பேஸ்புக்' 'வாட்ஸ் ஆப்' போன்றவற்றில் வைரலாக பரவி வருகிறது.
திண்டுக்கல் மேற்கு தாலுகாவிற்கு உட்பட்ட, தருமத்துப்பட்டி வருவாய் ஆய்வாளர் முத்தமிழ்ச்செல்வனின் உரையாடல் இதில் இடம் பெற்றுள்ளது. பயனாளியிடம் பேசுவது போன்ற 4 நிமிட வீடியோவில், ''தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளை எப்படி காட்டிக்கொடுக்க முடியும். அரசு ஆவணங்கள், பொதுமக்களிடம் நேரடியாக வழங்கப்படுவதே தவறு. எப்படி இது வெளியானது என அதிகாரிகள் கேட்பர். உங்களுக்கு(மனுதாரருக்கு) முந்தைய, 93ம் ஆண்டின் மனுவே நிலுவையில் உள்ளது. உங்கள் விஷயத்தில் பிரச்னை இல்லாததால், நாம் எழுதுவதுதான் ஆவணம்,'' என்கிறார்.
மனுதாரர் கூலி வேலைக்கு செல்வதால் தாமதம் தவிர்க்க வேண்டும்போது, ''பிரச்னையை முடித்து வைப்பதில், அதிகபட்சமாக இரண்டை குறைத்துக்கொள்ளலாம். வசதி உள்ளவர்களுக்கு வேறு, கிளார்க்காக இருக்கும்போது 40 ஆயிரத்திற்கு முடித்து கொடுத்துள்ளோம்,'' என பதிலளிக்கிறார். இது பலரது அலைபேசிகளுக்கும் பகிரப்பட்டு வருகிறது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.