தீபாவளி பலகாரம் வாங்க போறீங்களா? இதை கவனத்தில் கொள்ளுங்க!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளி பலகாரம் வாங்க போறீங்களா? இதை கவனத்தில் கொள்ளுங்க!

Added : அக் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

தீபாவளிக்கு பலகாரம் வாங்கும் வாடிக்கையாளர் கவனிக்க வேண்டியவை குறித்து, திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் தமிழ்செல்வன் அறிக்கை:

பலகாரங்களில், அதிக செயற்கை வண்ணங்கள் இருக்க கூடாது. பால் சேர்த்த இனிப்புகள், தனியாக பேக் செய்து வாங்க வேண்டும். ஈக்கள் மொய்க்கும், துர்நாற்றமுள்ள பண்டங்களை ஒருபோதும் வாங்கக்கூடாது.


ஓட்டல்களில் வாங்கினால், உரிய பில் கேட்டு பெற வேண்டும். கடை ஊழியர்கள் சுத்தமாக பலகாரங்களை கையாள்வதை உறுதி செய்ய வேண்டும். பயன்படுத்தும் எண்ணெய் குறித்த விவரம் உள்ளதா, பார்சல் செய்யும் கவர்கள் தரமானதா என்பதை கவனிக்க வேண்டும்.


சேர்க்கப்பட்ட பொருட்கள் விவரம்; தயாரிப்பாளர் முகவரி, பேக்கிங் மற்றும் காலாவதி தேதி, உணவு பாதுகாப்பு துறை உரிம எண் ஆகியன உள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண் டும். உணவு பொருள் தரம் குறித்த குறைகள் இருப்பின், உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தை, 0421- 297 1190; வாட்ஸ் ஆப் எண் 94440- 42322 ஆகிய எண்களில் புகார் செய்யலாம்.


உ<ற்பத்தியாளர் கவ னிக்க வேண்டியவை


பலகாரம் தயாரிப்பு மற்றும் விற்பனை இடம், மிகவும் சுகாதாரமாக இருக்க வேண்டும். எண்ணெய் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பாக்கெட்டுகளில் தயாரிப்பு, காலாவதி தேதி, <உரிமம் எண், முழு முகவரி கண்டிப்பாக இருக்க வேண்டும்.


தூய்மையான குடிநீரை மட்டுமே, தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும். பாத்திரங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். ஊழியர்கள் கையுறை, தலையுறை, மேல் அங்கி அணிய வேண்டும். உடற்தகுதி மருத்துவச்சான்று பெற்ற ஊழியர்களை மட்டுமே பணி யாற்ற வேண்டும். இவை உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை