திண்டுக்கல்லில் காய்ச்சல் அதிகரிப்பு: கலெக்டர் திடீர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் காய்ச்சல் அதிகரிப்பு: கலெக்டர் திடீர் ஆய்வு

Added : அக் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்,திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் அதிகரித்து வருவதையடுத்து மருத்துவமனையில் கலெக்டர் வினய் திடீர் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் அதிகமாகி வருகிறது. இதை சுகாதாரத் துறையினர் வைரஸ் காய்ச்சல் என சமாதானம் கூறி வருகின்றனர். இந்நிலையில் காய்ச்சல் பாதிப்பால் 120 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 900க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
தினமும் காய்ச்சல் பாதிப்பு நோயாளிகள் அதிகரிப்பதால், கலெக்டர் வினய் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நேற்று திடீர் ஆய்வு செய்தார். காய்ச்சல் வார்டு, ரத்த பரிசோதனை நிலையத்தை ஆய்வு செய்தார். மருத்துவ இணை இயக்குனர் மாலதி பிரகாஷ், கண்காணிப்பாளர் சிவக்குமார், நிலைய மருத்துவ அலுவலர் பிரபாகரன் உடனிருந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை