பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளது:4 கிலோ மட்டுமே வினியோகிக்க அனுமதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளது:4 கிலோ மட்டுமே வினியோகிக்க அனுமதி

Added : அக் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மஞ்சூர்:மஞ்சூர் சுற்றுவட்டாரத்தில் பரவலாக பெய்த மழையால், பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளது; இதனால், "கோட்டா' முறை அமல்படுத்தப்பட்டு, ஒரு உறுப்பினருக்கு, குறைந்தபட்சம், நான்கு கிலோ வினியோகிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், மஞ்சூர் சுற்றுவட்டாரத்தில், மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, எடக்காடு, இத்தலார், மேற்கு நாடு, கைக்காட்டி, மகாலிங்கா ஆகிய, எட்டு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு உறுப்பினர்களாக உள்ள, 15 ஆயிரம் பேர், தங்களது தோட்டத்தில் பறிக்கும் பசுந்தேயிலையை, அந்தந்த தொழிற்சாலைக்கு வினியோகிக்கின்றனர்.

நடப்பாண்டில் பெய்த மழையால், தேயிலை செடிகளுக்கு உகந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. தென் மேற்கு பருவமழையால், பகல் நேரத்தில் வெயில் தென்படுவதால், தேயிலை செடிகள் துளிர்விட்டு, பசுந்தேயிலை மகசூல் படிப்படியாக அதிகரித்தது. கடந்த ஒரு வாரமாக பெரும்பாலான கூட்டுறவு தொழிற்சாலைகளில், தினமும், 35 ஆயிரம் கிலோ பசுந்தேயிலை கொள்முதல் எட்டியது.மூன்று "ஷிப்ட்' அடிப்படையில் தேயிலை தூள் உற்பத்தி பணிகள் நடந்தாலும், சராசரியாக, 80 ஆயிரம் கிலோ முதல், ஒரு லட்சம் கிலோ வரை தேக்கநிலை ஏற்பட்டதால், கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலை, அரைப்பதில் திணறும் நிலை ஏற்பட்டது.


"கோட்டா' முறை அமல்


இதையடுத்து, நேற்று முன்தினம், கூட்டுறவு தொழிற்சாலைகளில் "கோட்டா' முறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி, ஒரு உறுப்பினருக்கு, நான்கு கிலோ முதல், அதிகபட்சம், 30 கிலோ வரை வினியோகிக்க அனுமதி அளிக்கப்பட்டு, அதற்கான அட்டை வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை அரைக்கும் திறனை பொறுத்து, வரும் நாட்களில் கூடுதலாக பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இது குறித்து, அதிகாரிகள் கூறுகையில், " இந்த மாற்றத்தால், தனியார் ஏஜென்ட்கள் முறைகேடாக, சில உறுப்பினர்கள் மூலம் பசுந்தேயிலை வினியோகிப்பதை தடுக்கப்படும்; பசுந்தேயிலை கொள்முதலை கட்டுக்குள் கொண்டுவர முடியும்,' என்றனர்.Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை