அழிவின் விளிம்பில் சோலைக்காடு:மக்கள் மனது வைத்தால் பாதுகாக்கலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அழிவின் விளிம்பில் சோலைக்காடு:மக்கள் மனது வைத்தால் பாதுகாக்கலாம்

Added : அக் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

உடுமலை:மேற்கு தொடர்ச்சி மலையில், அழியும் தருவாயில் உள்ள சோலைக்காடுகளை பாதுகாக்க, மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் மட்டுமே, குட்டையான மரங்களும், புல்வெளிகளும் கொண்ட, சோலைக்காடுகள் அதிகம் காணப்படுகின்றன. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் முதுமலை மற்றும் முக்கூர்த்தி; திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல்; கோவை மாவட்டத்தில் ஆனைமலை; நெல்லை மாவட்டத்தில் அகஸ்தியர்மலை என, தமிழகத்தில், 30 சோலைக்காடுகள் உள்ளன.


இக்காடுகள், நீர்வள ஆதாரத்துக்கு பெரிதும் உதவுகின்றன. சோலைக்காட்டில் உள்ள மரங்கள், மழை நீரை வேரில் சேமித்து வைத்து, சிறிது சிறிதாக வெளியேற்றும். புல்வெளியில் பஞ்சு போன்ற அமைப்பும், சோலைக்காட்டின் மண் பரப்பும், மழை நீரை சேமிக்கும். இந்த நீர் ஆதார அமைப்புகள் மூலமாகவே , அருவிகள் மற்றும் ஆறுகளில், ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுகிறது.


தற்போது அருவிகளும், ஆறுகளும் வறண்டு போனதற்கு, மழைப்பொழிவு இல்லாதது மட்டுமின்றி, சோலைக்காடுகளின் அழிவும் ஒரு


காரணமாகும். மழை இல்லாததால், வனவிலங்குகளின் எண்ணிக்கை குறைகிறது. அரியவகை தாவரங்களும், தண்ணீரின்றி அழிகின்றன. எனவே, சோலைக்காடுகளின் முக்கியத்துவம் குறித்து, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.


சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், "சோலைக்காடுகள் அழிவுக்கு, வேட்டில், பைன், யூகலிப்டஸ், அக்சேசியா உள்ளிட்ட மரங்களும், களைச்செடிகளுமே முக்கிய காரணமாகும்.

"பைன் மரங்களில் இருக்கும், வனப்பகுதியில் காபி மற்றும் நறுமணப் பயிர்கள் சாகுபடியாலும், சோலைக் காடுகள் அழிகின்றன. சோலைக்காடுகளை பாதுகாக்க, பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்,' என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை