கிரிக்கெட் சூதாட்ட மோசடி : அதிகாரியை விடுவிக்க மறுப்பு| Dinamalar

கிரிக்கெட் சூதாட்ட மோசடி : அதிகாரியை விடுவிக்க மறுப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: கிரிக்கெட் சூதாட்ட மோசடி புகாரில், குற்றம் சாட்டப்பட்ட சிலரிடம் ஆதாயம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், ஐ.பி.எஸ்., அதிகாரியை விடுவிக்க, சென்னை சிறப்பு நீதிமன்றம் மறுத்து விட்டது.
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டத்தில், கிரிக்கெட் வீரர்கள், தரகர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. பலர் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த, போலீஸ் அதிகாரி, சம்பத்குமார், வழக்கில் இருந்து சிலரை விடுவிக்க, தரகர்களிடம் பணம் பெற்றதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், சம்பத்குமார் மீது வழக்கு பபதிவு செய்யப்பட்டது. பணியில் இருந்து, அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
அவர் மீது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் இருந்து விடுவிக்க கோரி, சிறப்பு நீதிமன்றத்தில், சம்பத்குமார் மனு தாக்கல் செய்தார்.
அதற்கு, அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி, காஞ்சனா உத்தரவிட்டார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.