திருமலையில் மதுரை திருநாமக்குடை....| Dinamalar

திருமலையில் மதுரை திருநாமக்குடை....

Updated : அக் 14, 2017 | Added : அக் 14, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement


திருமலையில் மதுரை திருநாமக்குடை....


பழமையான சாஸ்திர சம்பிரதாயத்தை மாற்றாமல் யாருக்காகவும் அதை மீறாமல் எவருக்காகவும் காத்திராமல் குறிப்பிட்ட நேரத்தில் சுவாமி உலாவினை ஆரம்பித்து குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கும் திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் இந்த வருடம் ஒரு ஆச்சரியமான காட்சி தென்பட்டது.
விழா நடைபெற்ற ஒன்பது நாட்களும் சுவாமி உலா வந்த வாகனத்திற்கு முன்பாக ஒரு ஏழரை அடி உயரக்கம்பத்தை(திருநாமக்குடை) ஒருவர் துாக்கிக்கொண்டு வந்தார்.அந்த கம்பத்தில் தசாவதாரக்காட்சிகளும் உச்சியில் பஞ்சலோகத்தில் சங்கு சக்கரத்துடன் திருநாமம் இருந்தது.

சுவாமி வருவதை கட்டியங்கூறும் வகையில் முன்னாடி வந்த இந்த திருநாமக்குடையை பார்த்த பக்தர்கள் பலரும் வரவேற்று வணங்கி மகிழ்ந்தனர்.மதுரையில் இருந்து இதை துாக்கிக் கொண்டு வந்தவர் ஆனந்த் ஆவார்.

இனி அவரே இதன் பின்னனியைக்கூறுவார்.

பெருமாள் பக்தரான எனக்கு மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் போது பக்கத்தில் இருந்து பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது, பெருமாளுக்கு சேவை செய்யும் தொண்டனாக மாறினால்தான் நடக்கும் என எனக்கு கிடைத்த உத்திரவு மற்றும் பலரது ஆதரவு காரணமாக இந்த திருநாமக்குடையை உருவாக்கினேன்.
தேக்கு மரத்தில் தசாவதாரக்காட்சிகள் உருவாக்கப்பட்டது, இதன் உச்சியில் சங்கு சக்கரம் மற்றும் பெருமாளின் நாமம் வைக்கப்பட்டது மொத்தம் ஏழரை அடி உயரம் எடை சுமார் 25 கிலோவாகும்.நான் ஒரு சாதாரணமானவன் ஆனாலும் யாரிடமும் நன்கொடை வாங்காமல் சுயமாக சம்பாதித்துதான் இதைச் செய்யவேண்டும் என்று முடிவு செய்ததால் தாமதமாகிவிட்டது.

அதற்குள் அந்த வருட மதுரை சித்திரை திருவிழா முடிந்துவிட்டது இனி அடுத்த வருடம்தான் என்று நினைத்துக் கொண்டு இருந்த போது நண்பர் ஒருவர் திருப்பதியில் பெருமாளுக்கு திருவிழா நடக்கிறது அங்கு இதைக்கொண்டு போவோம் என்றார், அதுவரை நான் திருப்பதி சென்றதில்லை இருந்தாலும் சரி போவோம் என்று முடிவு செய்து திருநாமக்குடையுடன் சென்றுவிட்டோம்.
அவ்வளவு எளிதில் அனுமதி கிடைக்கவில்லை மொழி பிரச்னை வேறு இருந்தாலும் எனது உழைப்பில் எனது உணர்வில் இருந்த நேர்மையை உணர்ந்த கோவில் அதிகாரி பிரம்மோற்சவத்திற்கு முன்னோட்டமான ரதசப்தமி விழா நேரத்தில் குடையை அனுமதித்து கூடவே அவரும் வந்தார்.

திருநாமக்குடைக்கு பக்தர்கள் தந்த வரவேற்பை பார்த்துவிட்டு அவரே பிரம்மோற்சவ விழாவிற்கு வந்து கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.அழைப்பு விடுத்ததுடன் தங்குவதற்கு அறை, சாப்பாடு, தரிசன ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து மிக மரியாதையாக நடத்தினார்.
எவ்வளவு குளிராக இருந்தாலும் சட்டை போடாமல், எவ்வளவு மழை பெய்தாலும் ஒதுங்காமல் நான் திருநாமக்குடையுடன் மாடவீதிகளில் வலம் வருவதைப்பார்த்து கோவில் நிர்வாக அதிகாரியே நேரில் வந்து பாராட்டினார்.

எல்லோரும் இந்த திருநாமக்குடையை துாக்கிப்பார்க்க முயற்சிப்பர் ஆனால் இதன் எடை காரணமாக துாக்கமுடியாமல் எப்படிப்பா இதைத்துாக்கிக்கொண்டு காலை மற்றும் இரவு என சுமார் எட்டு மணி நேரம் நடக்கிறாய் என்று வியப்புடன் கேட்பர், நான் அவர்களுக்கு மட்டுமல்ல எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் பதில் ஒன்றுதான் இதை நான் எங்கே துாக்குகிறேன் எனக்காக பெருமாள் அல்லவா துாக்கிச் செல்கிறார் என்பதுதான் அது.
ஆனந்திடம் பேசுவதற்கான எண்:9965179322.


எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.inAdvertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s sambath kumar - chennai,இந்தியா
30-நவ-201710:18:15 IST Report Abuse
s sambath kumar இவர் கொடுத்து வைத்தவர். உண்மையான பக்தர். பெருமாள் க்ருபை இவருக்கு நிச்சயம் உண்டு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை