தாஜ் மஹால் ஒரு களங்கம்: பா.ஜ., எம்.எல்.ஏ., பேச்சால் சர்ச்சை| Dinamalar

தாஜ் மஹால் ஒரு களங்கம்: பா.ஜ., எம்.எல்.ஏ., பேச்சால் சர்ச்சை

Added : அக் 16, 2017 | கருத்துகள் (209)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பா.ஜ., BJP,தாஜ்மஹால்,Taj Mahal, எம்.எல்.ஏ,MLA, சர்ச்சை, Controversy,சங்கீத் சோம்,Sangeet Som, உ.பி சுற்றுலாத்துறை,UP Tourism, ஷாஜகான் , Shah Jahan, சமாஜ்வாதி கட்சி, Samajwadi Party,கலாச்சாரம் , Culture, பாரம்பரியம்,Tradition,  புதுடில்லி, New Delhi,

புதுடில்லி : நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா.ஜ., எம்.எல்.ஏ., சங்கீத் சோம், தாஜ்மஹால் குறித்து தெரிவித்துள்ள கருத்து, புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


தாஜ்மஹால் களங்கம் :


சங்கீத் சோம் பேசுகையில், தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது. இந்திய கலாச்சாரத்திற்கு களங்கம் விளைவிப்பது தான் தாஜ்மஹால். உ.பி., சுற்றுலாத்துறை குறிப்பேட்டில் இருந்து தாஜ்மஹால் நீக்கப்பட்டது வருத்தம் அளிப்பதாக பலரும் கூறுகின்றனர்.
அந்த வரலாற்றை பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என அவர்களுக்கு தெரியவில்லை. தாஜ் மஹாலை கட்டிய ஷாஜகான் தனது தந்தையையே சிறையில் அடைந்தவர். அவர் இந்துக்களை முற்றிலுமாக அழிக்க நினைத்தார். இத்தகையவர்கள் நமது வரலாற்றின் ஒரு அங்கமாக இருப்பது மிகவும் வேதனையானது. நமது வரலாற்றை மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.


பா.ஜ.,வுக்கு எதிர்ப்பு :


சங்கீத் சோமின் இந்த கருத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சமாஜ்வாதி கட்சியின் செய்தி தொடர்பாளர் சி.பி.ராய் கூறுகையில், பா.ஜ., வெறுப்பை பரப்பி வருகிறது. வரலாற்றை மாற்ற முடியாது. நன்மை, தீமை இரண்டையும் நாம் வரலாற்றில் இருந்து கற்க வேண்டும். இது போன்ற குறுகிய மனதுடையவர்களின் கருத்துக்களால் நமது வரலாற்று சிக்கித் தவிக்கிறது என்றார்.
சமீபத்தில் உ.பி., முதல்வர், நமது கலாச்சாரம் அல்லது பாரம்பரியத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறிய கருத்து சர்ச்சை ஆக்கப்பட்ட நிலையில், பா.ஜ.,வை சேர்ந்த எம்.எல்.ஏ., ஒருவரும் தாஜ்மஹால் குறித்து கூறி இருக்கும் கருத்து புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (209)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
X. Rosario Rajkumar - TRICHY,இந்தியா
16-அக்-201723:03:41 IST Report Abuse
X. Rosario Rajkumar ஒற்றுமைக்கு வழிகோலுங்கள்.பிரிவினைக்கு அல்ல.
Rate this:
Share this comment
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
16-அக்-201721:47:16 IST Report Abuse
S.Ganesan இந்த MLA வுக்கு வேறு வேலை இல்லை என்றால் சும்மா இருக்க வேண்டியது தானே ? தாஜ் மஹால் குறித்து இவர் கருத்து சொல்லவில்லை என்று யார் அழுதார்கள். தாஜ் மஹால் எப்படி இருந்தாலும் நமது நாட்டின் அரிய பொக்கிஷம். உலக அதிசயங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. நாட்டில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகள் எத்தனையோ இருக்கும் பொது இது தேவையற்ற பேச்சு. இவர்கள் எல்லாம் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே நாடு உருப்படும்.
Rate this:
Share this comment
Cancel
Kee Moo - Coimbatore,இந்தியா
16-அக்-201721:39:34 IST Report Abuse
Kee Moo ஏன்டா மொகலாய வரலாற்றிலிந்து ஆரம்பிக்கிற? சிந்து சம வெளில இருந்து வாடா. இங்கு இருந்தது திராவிடர்கள் மட்டுமே. ஆரியர்கள் ஆகிய நீங்கள் வேறு எங்கோ இருந்து வந்தவர்கள். அதனால் உங்களை ஊரே விட்டே தொரத்திடலாமா?
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
17-அக்-201700:01:13 IST Report Abuse
Agni Shivaஎந்த திராவிடன் இந்த மூர்க்கனிடமிருந்து கடன் வாங்கியிருந்தான் தெரியவில்லை? எவ்வளவு தொகை எந்த இடத்தில் இருந்து வாங்கினான் என்று சொன்னால் வட்டியும் முதலுமாக கொடுத்து விடலாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X