It's dynasty versus growth, says Modi | 'வளர்ச்சிக்கு முன் வாரிசு அரசியல் எடுபடாது' : மோடி தாக்கு Dinamalar
பதிவு செய்த நாள் :
'வளர்ச்சிக்கு முன் வாரிசு அரசியல் எடுபடாது' : மோடி தாக்கு

காந்திநகர் :"வளர்ச்சி திட்ட நடவடிக்கைகளுக்கு முன், வாரிசு அரசியல் எடுபடாது," என, பிரதமர், நரேந்திர மோடி பேசினார்.

 வாரிசு அரசியல் ,heir is political,காந்திநகர், Gandhi nagar,பிரதமர் நரேந்திர மோடி, Prime Minister Narendra Modi, குஜராத், Gujarat ,முதல்வர் விஜய் ரூபானி,Chief Minister Vijay Rupani,   காங்கிரஸ், Congress,சர்தார் சரோவர், Sardar Sarovar,  ஜி.எஸ்.டி.,GST, சரக்கு மற்றும் சேவை வரி,goods and Service Tax,  மோடி,Modi,


முயற்சி மேற்கொள்ளவில்லை


குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது.
விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், பா.ஜ.,வின் குஜராத் கவுரவ யாத்திரையின் நிறைவையொட்டி, நேற்று இரவு நடந்த பொதுக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:


வரும் சட்டசபை தேர்தலில், வளர்ச்சி திட்ட நடவடிக்கைகளை முன்வைத்து, காங்கிரஸ் கட்சியால் போட்டியிட முடியாது. குஜராத் மக்களுக்கு எதிராகவே, காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வந்தது.சர்தார் சரோவர் திட்டத்தை நிறைவேற்ற அவர்கள் முயற்சி மேற்கொள்ளவில்லை.

நம்மை குறை கூறுகிறது.அதனால், வரும் தேர்தலில், பா.ஜ.,வின் வளர்ச்சி திட்டங்களுக்கு முன், காங்கிரஸ் கட்சியின் வாரிசு அரசியல் எடுபடாது.
பல தலைவர்களை உருவாக்கிய மிக நீண்ட வரலாறு உடைய காங்கிரஸ் கட்சி, தற்போது பொய்யை பரப்பி வருகிறது; மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தும்முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை குறித்து, பல பொய் தகவல்களை காங்கிரஸ் பரப்பி வருகிறது.

Advertisement


இந்த வரி விதிப்பு முறையை கொண்டு வந்ததில், காங்கிரஸ் கட்சிக்கும் பங்கு உள்ளது. ஜி.எஸ்.டி.,யில் வர்த்தகர்களுக்கும், மக்களுக்கும் ஏதாவது பிரச்னை இருந்தால், அதற்கு தீர்வு காண்போம். லஞ்சம், ஊழலுக்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சி, வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ளும் நம்மை குறை கூறுகிறது. எந்த திட்டத்தை அறிவித்தாலும், அதை குறை கூறுவதை வழக்கமாக வைத்துள்ளனர்; அவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்.இவ்வாறு மோடி பேசினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
06-நவ-201715:17:54 IST Report Abuse

தமிழர்நீதி வளர்ச்சின்னா அதானி அம்பானி வளர்ச்சியா? தேசத்தின் வளர்ச்சிக்கு சுதந்திரத்திற்கு காங்கிரசுதான் காரணம். இதுல உங்கள் பங்கு ஏன்னா இருக்கு.

Rate this:
NERMAIYIN SIGARAM - TAMIL NADU,இந்தியா
17-அக்-201718:47:51 IST Report Abuse

NERMAIYIN SIGARAMகுஜராத் முன்னாள் முதல்வர் சுரேஷ் மேத்தா ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் விரிவாக அளித்திருந்த பேட்டியில், “மத்திய தணிக்கைக் குழு 2004ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் நிதிநிலைமை குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில், குஜராத் மாநில நிதிச்சூழலில் நிலவும் ஒழுங்கற்ற தன்மையை சீர்செய்யும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. அப்போதைய காலகட்டத்தில் குஜராத் மாநிலத்தின் கடன்தொகை ரூ.4000 முதல் ரூ.6000 கோடி வரை இருந்தது. ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குஜராத் நிதி மாநில நிதி பொறுப்பு சட்டம் 2005ன் படி குஜராத் மாநிலத்தின் கடன்தொகை ரூ.1லட்சத்து 98ஆயிரம் கோடியாக உள்ளது. குஜராத் மாநிலம் இதை ஒழுங்குபடுத்துவதைத் தவிர்க்கும்போது அது அந்த மாநிலத்தை மிகப்பெரிய நிதிநெருக்கடிக்குள் தள்ளிவிடும் என மத்திய தணிக்கைக் குழு எச்சரித்ததுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. குஜராத் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்காக ஒதுக்கப்படும் மானியம் குறைந்துகொண்டே வந்திருக்கிறது. 2006-07 காலகட்டத்தில் ரூ. 408 கோடியாக இருந்தநிலையில், 2016-17 காலகட்டத்தில் அது வெறும் ரூ. 80 கோடியாக குறைந்திருக்கிறது. அதேசமயம், பெட்ரோகெமிக்கல் துறைகளின் பெருமுதலாளிகளான அதானி மற்றும் அம்பானிக்கு வழங்கும் மானியங்கள் பத்து ஆண்டுகளில் ரூ.1,873 கோடியில் இருந்து ரூ. 4,471 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் இருந்தே தெரியவேண்டாமா குஜராத் அரசு எதற்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று? அதனால்தான் குஜராத் மாடல் என்பதெல்லாம் வார்த்தை வித்தை என்று சொல்கிறேன்” இது தான் குஜராத்தின் தற்போதய நிலை இதில் தமிழ்நாட்டை கம்பர் செய்கிறார்கள் பண்டாரங்கள்

Rate this:
Ramesh Kumar - coimbatore,இந்தியா
17-அக்-201718:22:45 IST Report Abuse

Ramesh Kumarதினமலரில் மோடிஜிக்கு எதிரான கருத்துக்கள் அதிகரித்து விட்டன..... பாஜக பக்தர்கள் ஓவர் டைம் வேலை செய்தாலும் இனி முட்டு கொடுப்பது கடினம்.......

Rate this:
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
17-அக்-201716:08:02 IST Report Abuse

முருகவேல் சண்முகம்../// தேச நேசன் - Chennai,இந்தியா போன சட்டமன்றத்தேர்தலின் போது இங்கு திமுக ஆதரவு கருத்துக்களுக்கு நூற்றுக்கணக்கில் 3 ஸ்டார் விழுந்தது நினைவிருக்கிறதா? பின்னர் என்னாயிற்று?...///அப்போ திமுகவிற்கு மட்டுமா விழுந்தது , பிஜேபி க்கு கூட தான் விழுந்தது, வாரி சுருட்டினீர்கள் மூன்று ஸ்டார்களை , அது உங்களை போல, காசுக்காக கூவும் பிஜேபி கூலிப்படையினரால் வந்தது என்பது பலருக்கும் தெரியும், இப்போதும் இங்கே மலரில் உங்களின் தாக்கம் அதிகமாக தான் தெரிகிறது, உங்கள் ஆதரவு செய்திகளுக்கே முக்கியத்துவமும், ஸ்டார்களும் அள்ளுகிறது, ஆதலால் நீங்கள் இங்கே என்ன சாதித்தது கொண்டா இருக்கிறீர்கள், காசுக்கு வாக்குகளை வாங்குவதும், காசுகொடுத்து கருத்துக்களை பதிவு செய்து , செய்தியின் தாக்கத்தை திசை திரும்புவதும் ஒன்றுதான், விளைவு பூஜ்யமே.

Rate this:
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
17-அக்-201716:04:20 IST Report Abuse

முருகவேல் சண்முகம்../// Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர் தொடர்ந்து கேடுகெட்டவர்களை தலையில் தூக்கி வைத்து ஆடும் அடிமைகளை ஒன்றும் செய்ய முடியாது...../// இது உங்களுக்கும் பொருந்தும் தானே, இப்போது நீங்கள் தூக்கி வைத்து கொண்டாடும் தலையும் நீங்கள் சொல்லும் அவ்வழியில் தான் சென்று கொண்டிருக்கிறார், அதை வருங்கால வரலாறு பதிவு செய்யும், அவர் ஒரு தோல்வி அடைந்த தலைவர் என்று.

Rate this:
Sulikki - Pudukkottai,இந்தியா
17-அக்-201715:33:59 IST Report Abuse

Sulikkiஇடவை கண்ணன் போல ஜாதியை மட்டும் வைத்து ஆதரிக்கும் நபர்களல்ல நாங்கள். உங்க வடநாட்டு வோட்டுதான் குர்தாஸ்பூருல குப்புற கவுந்துருச்சே அப்புறமும் ஏன் குதிக்கிறீங்க. வட நாடு முழுக்க வடை போச்சே கதையா ஆகபோகுது. குடந்தை, இடவை, குடவைன்னு அவாளுங்க மட்டுமே போதும் மோடியை கீழிறக்க. வேற யாரும் தேவை இல்லை.

Rate this:
பீ ஜெ பீ நேசன். - chennai,இந்தியா
17-அக்-201714:01:58 IST Report Abuse

பீ ஜெ பீ நேசன்.வாய் சவடால் அரசியலை விட வாரிசு அரசியல் பரவாயில்லை ..

Rate this:
Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா
17-அக்-201714:00:52 IST Report Abuse

Mohammed Abdul Kadarசெல்லா நோட்டு , GST யால் பாதிக்க பட்ட பொதுமக்களாகிய நாங்கள் இருக்கிறோம் , அடுத்து நாங்கள் கட்டாயம் உங்கள் ஆட்சியை இறக்குவோம்

Rate this:
Indian - Shelton,யூ.எஸ்.ஏ
17-அக்-201713:48:09 IST Report Abuse

Indianபோன் ஒயர் பிஞ்சு ரொம்ப நாளாச்சு மோடிஜி.

Rate this:
roashan -  ( Posted via: Dinamalar Android App )
17-அக்-201713:07:22 IST Report Abuse

roashanuseless bjp government ,alwys giving hard time to low class people. all their scheme r lies only

Rate this:
மேலும் 67 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement