Freeze two-leaves symbol permanently: Dhinakaran to EC | 23-ம் தேதி! இரட்டை இலை யாருக்கு என்பது தெரிந்துவிடும் Dinamalar
பதிவு செய்த நாள் :
   இரட்டை இலை ,irattai ilai,  தேர்தல் ஆணையம், Election Commission,ஆர்.கே.நகர் இடைத் தேர்தல், RK Nagar bi election, அ.தி.மு.க.,AIADMK,  சசிகலா, Sasikala, பன்னீர்செல்வம், Panneerselvam, முதல்வர் பழனிசாமி ,Chief Minister Palanisamy,  பொதுக்குழு, General Body,வழக்கறிஞர்கள்,  Lawyers, வைத்தியநாதன்,Vaidyanathan, விஸ்வநாதன்,Viswanathan,  குரு கிருஷ்ணகுமார்,Guru Krishnakumar,  மனோஜ் பாண்டியன், Manoj Pandian,  தினகரன் ,Dinakaran,

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையை, தேர்தல் ஆணையம், வரும், 23க்கு, மீண்டும் ஒத்திவைத்துள்ளது. இதனால், இரட்டை இலை யாருக்கு என்பது, அன்று தெரிந்து விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது, அ.தி.மு.க.,வின் இரட்டை இலைச் சின்னத்தை, தலைமை தேர்தல் ஆணையம் முடக்கியது.

   இரட்டை இலை ,irattai ilai,  தேர்தல் ஆணையம், Election Commission,ஆர்.கே.நகர் இடைத் தேர்தல், RK Nagar bi election, அ.தி.மு.க.,AIADMK,  சசிகலா, Sasikala, பன்னீர்செல்வம், Panneerselvam, முதல்வர் பழனிசாமி ,Chief Minister Palanisamy,  பொதுக்குழு, General Body,வழக்கறிஞர்கள்,  Lawyers, வைத்தியநாதன்,Vaidyanathan, விஸ்வநாதன்,Viswanathan,  குரு கிருஷ்ணகுமார்,Guru Krishnakumar,  மனோஜ் பாண்டியன், Manoj Pandian,  தினகரன் ,Dinakaran,

இதன்பின், சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என இரண்டாக பிரிந்து இருந்த நிலை மாறியது. முதல்வர், பழனிசாமி தலைமையிலான அணியும், எதிர்தரப்பான, பன்னீர்செல்வம் அணியும் பொதுக்குழுவை கூட்டி, முறையாக இணைந்தனர்.அணிகள் இணைந்தாலும், இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு, தேர்தல் ஆணையத்தில் அப்படியே நீடித்தது.

இணைப்பு கடிதம்


இதையடுத்து, தாங்களே உண்மையான அணி எனக் கோரி, பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணியினர், அதிகாரப்பூர்வ இணைப்புக் கடிதம் அளித்தனர்.எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் ஆகியோரது ஆதரவு கடிதங்கள் கேட்கப்படவே, அதற்கான பிரமாணப் பத்திரங்களை, பழனிசாமி மற்றும் பன்னீர் அணியினர் இணைந்து, ஓரணியாக தாக்கல் செய்தனர். இதையடுத்து, இம்மாதம்,

6ல், வழக்கு விசாரணை, தேர்தல் ஆணையத்தில் நடந்தது; அதில், பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர்கள், வாதங்களை முன்வைத்தனர்.இந்நிலையில், சசிகலா அணி தரப்பிலான வாதங்களுக்காக, நேற்று மீண்டும் இது தொடர்பான வழக்கு, தேர்தல் ஆணையத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் பங்கேற்க, தமிழக அமைச்சர்கள், சண்முகம், உதயகுமார், அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி,மைத்ரேயன் ஆகியோருடன், மூத்த வழக்கறிஞர்கள், வைத்தியநாதன், விஸ்வநாதன், குரு கிருஷ்ணகுமார், மனோஜ் பாண்டியன் வந்திருந்தனர்.சசிகலா அணி தரப்பில், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், தங்கத் தமிழ்ச் செல்வன், பழனியப்பன் ஆகியோரும் வந்திருந்தனர். இந்த அணிக்காக, மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, அஸ்வினி குமார் ஆஜரானார். இவருடன், வழக்கறிஞர்கள், விஜய் ஹன்சாரியா, உபல், ராஜா செந்துார் பாண்டியன் ஆகியோரும் வந்திருந்தனர்.அஸ்வினிகுமார் வாதிட்டதாவது:பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணியினர் தாக்கல் செய்துள்ளவை, போலி பிரமாணபத்திரங்கள். அவற்றில் உண்மைக்கு மாறாக, போலி கையெழுத்துகள் உள்ளன.

அவசரம் கூடாது




ஆறு நிர்வாகிகளிடம் மிரட்டி, கையெழுத்துகளைப் பெற்று, தாக்கல் செய்துஉள்ளனர். 100க்கும் அதிக மானோரின் கையெழுத்துகள் போலியானவை; அவற்றை பரிசீலனைக்கு எடுக்கக் கூடாது.சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை குறித்து, தீர்வு

Advertisement

காண்பதற்காக, கோர்ட் குறிப்பிட்டுள்ள, நவ., 10ம் தேதி என்பது, இறுதியான காலக்கெடு அல்ல. தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரங்கள் ஒவ்வொன்றையும், தனித்தனியே விசாரிக்க வேண்டும். அவசரப்பட்டு முடிவு எடுத்துவிடக் கூடாது.இவ்வாறு அவர் வாதிட்டார். மேலும், தேவைப்பட்டால், பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வரையில், இரட்டை இலைச் சின்னத்தை, முடக்கி வைக்க வேண்டும் என்றும், அவர் வாதிட்டதாக தெரிகிறது.தீபா அணி சார்பில் வந்திருந்த, வழக்கறிஞர் வாதிடுகையில், 'பொதுச் செயலருக்கான தேர்தலை முறைப்படி நடத்த உத்தரவிட வேண்டும். 'கட்சி விதிகளின்படி, தொண்டர்கள் ஓட்டு போட்டு, புதிய பொதுச்செயலரை தேர்ந்தெடுத்து, அவரிடம் சின்னத்தை ஒப்படைக்க வேண்டும்' என்றார்.


தினகரன் முயற்சி தோல்வி



இறுதியில், 'இந்த வழக்கு விசாரணை, வரும், 23ல், மீண்டும் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரட்டை இலை யாருக்கு கிடைக்கும் என்பது, 23ல் தெரிந்து விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சின்னத்தை முடக்க நினைத்த, தினகரனின் முயற்சி தோல்விஅடைந்துள்ளது. இதற்கிடையே, அ.தி.மு.க., வின் ஆண்டுவிழா இன்று கொண்டாடப்படும் நிலையில், இரட்டை இலையை முடக்கும்படி, தேர்தல் ஆணையத்தில், தினகரன் தரப்பினர் கோரிக்கை வைத்திருப்பது, அந்த கட்சி தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .- நமது டில்லி நிருபர் -


Advertisement

Advertisement

மேலும் முதல் பக்க செய்திகள்:



வாசகர் கருத்து (47+ 11)

அப்பாவி - coimbatore,இந்தியா
17-அக்-201718:10:35 IST Report Abuse

அப்பாவிமோசடியின் ஆதரவு ஒபிஸ் மற்றும் இ பி எஸ் இருவருக்கும் இருக்கும் வரை தினகரன் மண்ணை கவ்வ வேண்டியது தான்.

Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
17-அக்-201716:19:46 IST Report Abuse

Indhuindianஇரட்டை இலை எடப்பாடி ஓ பி எஸ்க்கு கொடுப்பது பொருத்தமாக இருக்கும். ஒரு இலையில் எடப்பாடி போட்டோவும் மற்றொண்டில் ஓ பி எஸ்ஸின் போட்டோவும் போட்டுக்கொள்ளலாம்

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
17-அக்-201716:07:32 IST Report Abuse

Endrum Indianஇரட்டை இலை யாருக்கு என்று தெரிந்தவுடன் டாஸ்மாக் நாடு உடனே தமிழ்நாடு ஆகி விடும் அப்படி தானே????

Rate this:
niki - Chennai,இந்தியா
17-அக்-201715:38:12 IST Report Abuse

nikiperumpaanmai konda arsukkey chinnam kidaikkum

Rate this:
Jeeva - virudhunagar,இந்தியா
17-அக்-201715:33:27 IST Report Abuse

Jeeva தினகரன் இல்லாத அதிமுக தான் தேவை .

Rate this:
Selvam Pillai - Dammam,சவுதி அரேபியா
17-அக்-201714:56:12 IST Report Abuse

Selvam Pillaiஇருபத்தி மூன்றாம் தேதியும் தீர்ப்பு கிடைக்காது. மோடிஜி அவ்வளவு சீக்கிரம் இந்த தீர்ப்பை வெளியிட அனுமதிக்க மாட்டார். வெளியிட்டால் தமிழக பாஜக நிலைமை மோசமாகிவிடும் என்று அவருக்கு தெரியும். தேர்தல் வரை இழுக்கடிப்பது அவர் திட்டம். உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் யாருக்கு அதிக மக்கள் ஆதரவு உண்டு என்பது தெரிந்துவிடும். அவர்களுக்கே இரட்டை இலைசின்னத்தை கொடுப்பதுதான் சரி.

Rate this:
Sundaram - Thanjavur,இந்தியா
17-அக்-201714:14:52 IST Report Abuse

SundaramIn a reasonable manner, the Election Commission will act and hand over the two leaves to the eligible Government

Rate this:
M Ragh - Kanchi,இந்தியா
17-அக்-201713:56:46 IST Report Abuse

M RaghIppo nadakira koothukku anda retta ilay vandu enna panna pogudu.

Rate this:
elangovan - TN,இந்தியா
17-அக்-201713:37:50 IST Report Abuse

elangovanAiadmk is for people’s party started by Great leader MGR and Great leader Amma. The current political leader EPS And OPS and prime suspect in Ammas deathcase Sasi team are not reliable leader for aiadmk. People to elect the new leader for aiadmk under the court and election commission. No one will be getting easily those who all are not reliable to Amma and not even to take any initiative immediately on Ammas death case. We want good and young corruptionless leader Amma blood relation Deepa mam to take over the Aiadmk leader ship with good young team

Rate this:
shekaran - thiruchi,இந்தியா
17-அக்-201712:55:37 IST Report Abuse

shekaranethukku avalavu naal ippaiyae na soluraen chinnam athimuga anikkae

Rate this:
மேலும் 37 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
மேலும் செய்திகள்