ரூ.1,420 கோடிக்கு கணக்கு எங்கே? தமிழகத்திடம் கேட்கிறது டில்லி! Dinamalar
பதிவு செய்த நாள் :
ரூ.1,420 கோடிக்கு கணக்கு எங்கே?
தமிழகத்திடம் கேட்கிறது டில்லி!

நகர்ப்புற ஏழைகளுக்கு அடிப்படை வசதிகள் செய்ய, 2012ல் வழங்கப்பட்ட, 1,420 கோடி ரூபாய்க்கு, செலவு விபரங்களை அனுப்புமாறு, தமிழக வீட்டுவசதி துறை செயலருக்கு, மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

 தமிழகம்,Tamilnadu, டில்லி,Delhi,  தமிழக வீட்டுவசதி துறை, Tamil Nadu Housing Board,மத்திய அரசு ,Central Government, ஜே.என்.என். யு.ஆர்.எம்., JNNURM, நகர்ப்புற ஏழைகளுக்கு அடிப்படை வசதி, basic facilities for urban poor,காங்கிரஸ்,Congress, அம்ரூத், Amrut,  தமிழக அரசு , TN Government,

காங்கிரஸ் தலைமையிலான ஐ.முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், தேசிய நகர்ப்புற மேம்பாட்டுக்கான,ஜே.என்.என். யு.ஆர்.எம்., திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதி யாக, நகர்ப்புற ஏழை மக்களுக்கு, அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன.

'அம்ரூத்' திட்டம்:

இதில், தமிழகத்தில்,

145 திட்டங்களை செயல்படுத்த, ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதற்கு, மத்திய அரசின் பங்காக, 1,420 கோடி ரூபாய், 2012 வரைவழங்கப்பட்டுள்ளது. ஜே.என்.என்.யு.ஆர்.எம்., திட்டம் முடிக்கப்பட்டு, புதிதாக, 'அம்ரூத்' திட்டம் துவக்கப் பட்டுள்ளது.

எனவே, பழைய திட்டத்திற்கு வழங்கப்பட்ட, 1,420 கோடி ரூபாய் குறித்து, தமிழக அரசு விபரம் அளிக்க வில்லை. அதனால், இந்த நிதி, முறையாக செலவிடப்பட்டதா, இல்லையா என்ற, சந்தேகம் எழுந்து உள்ளது.

இதுகுறித்து, மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள், தமிழக அரசின் வீட்டுவசதிதுறை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

பதில் இல்லை


அதில், கூறப்பட்டுள்ளதாவது:நகர்ப்புற ஏழைகளுக் கான, அடிப்படை வசதிகள் மேம்பாட்டுதிட்டத்துக்கு, 2012 மார்ச், 31 வரை, 1,420 கோடி ரூபாய் விடுவிக்கப் பட்டது.இந்த நிதி செலவிடப்பட்டதா; என்னென்ன

Advertisement

பணிகள் செய்யப்பட்டன என்பது குறித்த விபரங்கள், இதுவரை வரவில்லை.இது தொடர்பாக, இரண்டு ஆண்டுகளில், ஏழு முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டன; எந்த பதிலும் வரவில்லை.எனவே, இந்த கடிதத்துக்கு, உயர் முன்னுரிமை அளித்து, செலவு விபரங்களை அனுப்ப நடவடிக்கை எடுங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
18-அக்-201720:00:06 IST Report Abuse

Rajendra Bupathiயேவ்? ஏம்பா மாப்பிள்ளை விநாயகர் சோடா ஒண்ணு கொடு?

Rate this:
Gopal.V. - bangalore,இந்தியா
18-அக்-201718:45:47 IST Report Abuse

Gopal.V.2012 , 2007 , 2002 , 1997 இப்படியே 1972 வரைக்கும் போனா ஊழலை யார் ஆரம்பிச்சா.. எப்படியெல்லாம் ஊழல் பண்ணியிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்து 1969 லிருந்து கணக்கெடுத்தால் இப்போ பெரிய மனுஷன்கிற பெயரில் உள்ள அத்தனை பேரையும் உள்ளே தள்ள வேண்டியிருக்கும்..

Rate this:
Gopal.V. - bangalore,இந்தியா
18-அக்-201718:37:23 IST Report Abuse

Gopal.V.ஆயிரத்து நானூத்து இருபது கோடியா..? அப்படின்னா என்ன என்று கேட்பார்கள்.. எப்படியெல்லாம் ஏப்பம் விட்டீர்கள் என கேட்டிருந்தால் சினிமா கதை போல விவரமாக சொல்லியிருப்பார்கள். திருட்டு பயலுக..

Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X