'டெங்கு' இறப்பு சான்று: ஸ்டாலின் பாய்ச்சல் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'டெங்கு' இறப்பு சான்று: ஸ்டாலின் பாய்ச்சல்

சென்னை:''டெங்கு காய்ச்சலில் இறந்ததாக சான்றிதழ் கொடுக்கக் கூடாது என, தனியார் மருத்துவமனைகளுக்கு, அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறினார்.

சென்னை, எழும்பூர் அரசு மருத்துவமனையில், 'டெங்கு' காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூறிய பின், நேற்று, ஸ்டாலின் அளித்த பேட்டி:

தமிழக அரசு முழுமையான தடுப்பு நடவடிக்கை களை எடுக்காததால், தமிழகம், டெங்கு மாநில மாக மாறி வருகிறது. மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், டெங்குவை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை.மத்திய குழுவும், தமிழதக்தில் முழுமையாக ஆய்வு செய்யவில்லை. டெங்கு காய்ச்சல் சாதாரண விஷயம் என்பது போல்

பேசி உள்ளனர். இதற்கு, மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க முடியாது எனவும், கூறி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில், டெங்கு பாதிப்புக்கு, 40 பேர் தான் இறந்துள்ளனர் என கூறுவது, வேதனையாக உள்ளது.

'டெங்கு காய்ச்சலில் இறந்ததாக சான்றிதழ் கொடுக்கக் கூடாது' என, தனியார் மருத்துவமனை களுக்கு, அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்து உள்ளது.இதை மீறி சான்றிதழ் கொடுத்தால், மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்யபடும் என, அச்சுறுத்தி உள்ளனர்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

இதற்கிடையில்ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:

பார்லி., பணிகளில், பழுத்த அனுபவம் பெற்றவர், துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு. இவர், சென்னை, ராஜ்பவனில் நடந்த விழாவில் பேசினார்.

Advertisement

டெங்கு, Dengue, இறப்பு சான்று, Death Certificate,ஸ்டாலின்,Stalin, சென்னை, Chennai,  டெங்கு காய்ச்சல்,Dengue Fever, தனியார் மருத்துவமனை,  Private Hospital,தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்,DMK Executive leader Stalin, எழும்பூர் அரசு மருத்துவமனை,Egmore Government Hospital,  சிகிச்சை, Treatment,தமிழக அரசு ,TN Government, தமிழகம், Tamil Nadu,

அப்போது, 'ஜெயலலிதா அளித்த வாக்குறுதி களை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு, இந்த அரசுக்கு இருக்கிறது.'ஓர் ஆட்சி,சட்டசபையில், மெஜாரிட்டி நிரூபித்து விட்டால், 5 ஆண்டுகள் கழித்தே, மக்களிடம் செல்ல வேண்டும். அரசியல் சட்டத்தை மீறி, கவர்னர் நடக்க வேண்டும் என, நாம் எதிர்பார்க்க முடியாது' என, குறிப்பிட்டு உள்ளார்.

துணை ஜனாதிபதி, அரசியல் பேசியிருப்பது, அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்றது தானா என்பதை, அவரே சுய பரிசோதனை செய்து கொள்வார் என, நம்புகிறேன்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-அக்-201715:44:27 IST Report Abuse

Kasimani Baskaranடெங்கி கொசு மூலம் பரவும் ஒரு வைரஸ்... கொசு வளர்வதை தடுத்தால் மட்டுமே டெங்கியை கட்டுப்படுத்த முடியும்... குப்பை கூளங்களை அள்ளி இவர் கொசுக்களை ஒழிக்க போராடுவது போல படம் காட்டுகிறார்கள்.. அம்மாஜியை சிறை வைத்த பொழுது ஓரிரு பயித்தியங்கள் மாரடைப்பால் இறந்தன என்று வந்த செய்தியை - அத்தனைபேரும் மாரடைப்பில் இறந்ததாக கணக்கெழுதினார்களே அது போல இவர் 400 என்று கனக்குச்சொன்னார்...

Rate this:
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
18-அக்-201714:40:46 IST Report Abuse

Tamizhan kanchiஇவரு பெரிய புலி . பாய்தாராமே..பாய்ஞ்சு என்ன செய்யபோர.. கொசுவடிக்க புலி வருதுடோய்.புலி புலி புலி வருதுடோய்....

Rate this:
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
18-அக்-201711:46:49 IST Report Abuse

GB.ரிஸ்வான் அனைத்து தினமலர் வாசக அன்பர்களுக்கு ...தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.... இங்கே நம்மிடையே ஆயிரம் கருத்து வேற்றுமைகள் மற்றும் மோதல்கள் இருந்தாலும் நாம் அனைவரும் தினமலரின் குழுவினர்..... வலைத்தளம் மூலம் நம்மை இணைத்த தினமலர் ஆசிரியர் மற்றும் குழுவினருக்கு மீண்டும் பாராட்டுகளுடன் தீபாவளி நல்ல வாழ்த்துக்கள் கூறி பதிவு செய்கிறேன்...

Rate this:
Natarajan Ramanathan - chennai,இந்தியா
18-அக்-201710:55:05 IST Report Abuse

Natarajan Ramanathanஉன்னோட அப்பன் முதல்வராக இருக்கும்போது பேசியத்தைவிடவா துணை ஜனாதிபதி தவறாக பேசிவிட்டார்? கேவலமாக, அசிங்கமாக, அருவருப்பாக எல்லாம் பேசுவது உங்கள் குடும்ப ரத்தத்திலேயே இருக்கு....

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-அக்-201709:13:39 IST Report Abuse

Srinivasan Kannaiyaடெங்கு காய்ச்சலில் இறந்ததாக சான்றிதழ் கொடுக்கக் கூடாது என, தனியார் மருத்துவமனைகளுக்கு, அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது, நீங்க என்றால் அடியாள் வைத்து மிரட்டி இருப்பீர்கள்..

Rate this:
rajan - kerala,இந்தியா
18-அக்-201709:01:50 IST Report Abuse

rajanசபாஷ் உங்க அச்சன் காலத்து அரசியல் வழி முறை நல்ல கொடி கட்டி பறக்குதே. போகிற போக்கை பார்த்தால் இவனுக உங்க அச்சனை மிஞ்சிடுவாங்களோ. மறுபடியும் சவால் உனக்கு தான் தம்பி.

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
18-அக்-201707:17:06 IST Report Abuse

தேச நேசன் உங்க கொள்கை என்ன? 1 மத்திய அரசுக்கு மாநில அரசுகளைக் கலைக்கும் உரிமைக்கூடாது அதற்கான அரசியல்சட்டம் 356 ஆம் பிரிவு விலக்கப்பட வேண்டும் 2 ஆட்டுக்குதாடி எதற்கு? (அதுதான் ரம்ஜான் கஞ்சி சாப்பிட வராதே)ஆளுநர் எனும் கவர்னர் எதற்கு ? வேண்டவே வேண்டாம் எனக்கூறுபவர்கள் தானே? பின்னர் ஒரு முறை மக்களால் ஐந்தாண்டுகளுக்கு தேர்தெடுக்கப்பட்ட அரசு தொடர்வது தானே நியாயம் எனக்கூறுவதில் என்ன தவறு? அதாவது உங்க கொள்கைகள் நேரத்துக்கு நேரம் பச்சோந்தி போல நிறம் மாறும் உங்க அரசுக்கு ஒரு நியாயம் எம்ஜியார் ஜெயலலிதா அதிமுக அரசு என்றால் வேறு நியாயம் ஊழல் செய்யும் உரிமை உங்கக் குடும்பத்துக்கு மட்டுமே பாத்தியப்பட்டதோ? எப்படிப் பார்த்தாலும் அவர்கள் போய் நீங்கள் வந்தாலும் ஆட்டைப்போடுவது அதிகரிக்கத்தான் போகிறது மக்களுக்கு புத்தியிருந்தால் என்றோ திராவிடபக்கிகள் வாக்குகேட்கவரும்போது அடித்து விரட்டியிருப்பார்கள் எங்க பக்கம் வாங்க தெரியும் சேதி

Rate this:
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
18-அக்-201702:23:15 IST Report Abuse

குஞ்சுமணி சென்னைதிருநங்கைகளுக்கு மட்டும் என் தீபாவளி வாழ்த்துக்கள்

Rate this:
கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா
18-அக்-201701:55:45 IST Report Abuse

கும்புடுறேன் சாமிநமக்கே ஆல்ஹகால் உள்ள போனா தொண்ட எரியுது அப்போ நம்ம ரத்தத்துல ஆல்ஹகால் இருந்தா அத குடிக்கிற கொசுக்கள் எரிச்சல்ல அங்கையே ஆள் அவுட் தான். இதுக்குத்தான் அரசு டாஸ்மாக்கை திறந்திருக்கு. இத்தனை பேர் டேங்குக்கு இறந்திருக்காங்க அதுல குடிமகன்கள் யாரும் இல்ல. டெங்குக்கு நில வேம்பு கஷாயத்தைவிட டாஸ்மாக்கே சிறந்தது

Rate this:
Baskar - Paris,பிரான்ஸ்
18-அக்-201712:43:29 IST Report Abuse

Baskarடெங்கு டெங்கு என்று குதிக்கும் இந்த டெங்குவுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்....

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement