When Pranab Mukherjee riled Sonia Gandhi by meeting Bal Thackeray | சோனியாவின் விருப்பத்தை மீறி தாக்கரேயை சந்தித்தது ஏன் Dinamalar
பதிவு செய்த நாள் :
சோனியாவின் விருப்பத்தை மீறி
தாக்கரேயை சந்தித்தது ஏன்

புதுடில்லி:ஜனாதிபதி தேர்தலின்போது, காங்., தலைவர், சோனியாவின் விருப்பத்தை மீறி, சிவசேனா தலைவர், பால் தாக்கரேயை சந்தித்தது குறித்து, தன் புதிய புத்தகத்தில், முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.

  ஜனாதிபதி தேர்தல்,Presidential Election, காங்கிரஸ் தலைவர், சோனியா, Congress President Sonia Gandhi, சிவசேனா தலைவர் பால் தாக்கரே, Shiv Sena leader Bal Thackeray, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, former President Pranab Mukherjee,  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்,nationalist Congress leader Sharad Pawar,  வங்க புலி, Bengal Tiger,மராத்தா புலி, Maratha Tiger,சோனியா,Sonia,  பால் தாக்கரே, Paul Thackeray, புதுடில்லி, New Delhi,

கடந்த, 2012 முதல், இந்தாண்டு ஜூலை மாதம் வரை ஜனாதிபதியாக பதவி வகித்த பிரணாப் முகர்ஜி, 'கூட்டணி காலம்' என்ற பெயரில், தன் அரசியல் அனுபவங்களை புத்தகமாக தொகுத்து உள்ளார்; அதில் அவர் கூறியுள்ளதாவது:

ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்ட நான், 2012 ஜூலை, 13ல், மும்பைக்கு பிரசாரத்துக்காக சென்றபோது, சிவசேனா தலைவர்,

பால் தாக்கரேயை சந்தித்தேன். பா.ஜ., தலைமை யிலானதேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்தபோதும், தாக்கரே எனக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர், சரத் பவாரின் முயற்சியால், தாக்கரே எனக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். மும்பைக்கு செல்வதற்கு முன், தாக்கரேயை சந்திப்பது குறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் சரத் பவாரிடம் ஆலோசனை செய்தேன்.

சந்திப்பதை தவிர்க்கும்படி சோனியா கூறினார். ஆனால், 'சந்திக்காவிட்டால் தாக்கரேவுக்கு அதிருப்தி ஏற்படும்' என, பவார் கூறினார். தாக்கரே உடனான சந்திப்பு சோனியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதை தெரிந்து கொண்டேன். ஆனால், அது குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை.
மம்தாபானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது.

காங்கிரஸ் அரசின் ஆட்சிக் காலம் மேலும் இரண்டு ஆண்டுகள் இருந்தன. அந்த நேரத்தில், தாக்கரே வின் ஆதரவைப் பெற்றுத் தந்த, சரத் பவாரையும்

Advertisement

இழக்க விரும்பவில்லை.பா.ஜ., கூட்டணியில் இருந்தபோதும், எனக்கு ஆதரவு தந்த தாக்கரேயை சந்திப்பதுதான் மரியாதையாக இருக்கும். இவ்வாறு பல்வேறு கோணங்களில் யோசித்தே, பால் தாக்கரேயை சந்தித்தேன்.

அந்த சந்திப்புக்குப் பின், சரத்பவார் என்னுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் பேசினார். 'வங்க புலியை, மராத்தா புலி ஆதரிப்பது இயற்கை யானது' என, பவார் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். ஒரு சந்திப்பால் பல பலன்களை பெற்றோம்.இவ்வாறு புத்தகத்தில், பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
18-அக்-201712:29:49 IST Report Abuse

Kuppuswamykesavanயாரொருவரும், அரசு சார்ந்த பதவியில் இருக்கும் வரை, அவரின் மனம், ஓர் குழம்பிய நீர் குட்டை தான் எனலாம்?. ஆனால், அந்த பதவியை விட்டு, அந்த நபர் ஓய்வு பெற்றுவிட்டால், அவரின் மனம், ஓர் தெளிந்த நீர் குட்டையாகின்றது எனலாம். எனவே, நீருக்கடியில் அழுந்தி கிடந்த, பல நீர் குழுமிகள், சின்னதும் பெரியதுமாக, மள மள என, நீர் மட்டத்தின் மேல் நோக்கி ஓடி வருகின்றன. அதை பார்த்து, ரசிப்பவர்கள் ரசிக்கலாம், விசயம் அவ்வளவே.

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
18-அக்-201711:33:39 IST Report Abuse

Malick Rajaஇவர்கள் எல்லாம் பொது சொத்தை சாப்பிட்டு விட்டு ஏப்பம் விடுவதை போல .. அனுபவித்து விட்டு கலாய்க்கிறார்கள் ..

Rate this:
Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
18-அக்-201710:45:49 IST Report Abuse

Malimar Nagoreஒரு நாட்டின் ஜனாதிபதி ஆக வேண்டிய ஒருவர் ஒரு ரௌடியிடம் போய் ஆதரவு கேட்பது ......

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X