'சிவன் கோயிலை இடித்து தான் தாஜ்மஹால் கட்டினார் ஷாஜகான்!' Dinamalar
பதிவு செய்த நாள் :
'சிவன் கோயிலை இடித்து தான்
தாஜ்மஹால் கட்டினார் ஷாஜகான்!'

லக்னோ: ''சிவன் கோயிலை இடித்து தான், தாஜ்மஹாலை,முகலாய மன்னர் ஷாஜகான் கட்டினார்,'' என, பா.ஜ.,- எம்.பி., வினய் கட்டியார் கூறினார்.

சிவன்,கோயிலை,இடித்து,தான்,தாஜ்மஹால்,கட்டினார்,ஷாஜகான்!'

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் உள்ள சுற்றுலா தல விபரங்கள் அடங்கிய புத்தகம் ஒன்றை, மாநில சுற்றுலாத் துறை சமீபத்தில் வெளியிட்டது. இதில், அம்மாநிலத்தின் ஆக்ராவில், 17ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட, தாஜ் மஹால் இடம்

பெறவில்லை. இது, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.இது பற்றி, பா.ஜ., - எம்.எல்.ஏ., சங்கீத் சோம் கூறுகையில், 'இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீது விழுந்த கரும்புள்ளியாக, தாஜ் மஹால் உள்ளது.

நம்தேசத்தின் விரோதிகள் தான், இதை கட்டினர். தாஜ்மஹாலை நினைத்து, பெருமை பட எதுவும் இல்லை' என்றார்.இதனால், ஏற்பட்ட சர்ச்சை அடங்குவதற்குள், பா.ஜ.,வை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., வினய் கட்டியார், 'சிவன் கோவிலை இடித்து விட்டு தான், தாஜ்மஹாலை ஷாஜகான் கட்டினார்' என, கூறியுள்ளார்.

தனியார், 'டிவி' சேனல் ஒன்றுக்கு, அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:ஆக்ராவில், யமுனை ஆற்றின் கரையில், 'தேஜோ மஹாலயா'என, அழைக்கப்பட்ட சிவன் கோயில் இருந்தது. மிகவும் பிரபலமாக இருந்த இந்த கோயிலை இடித்து விட்டு தான், தாஜ் மஹாலை, ஷாஜகான் கட்டினார். இது, வரலாறு பூர்வமான உண்மை. இதற்கான ஆதாரங்கள், இப்போதும் உள்ளன. ஆனால்,

Advertisement

அதற்காக, தாஜ் மஹாலை இடிக்க வேண்டும் என, நாங்கள் கூறவில்லை; விரும்பவும் இல்லை.அயோத்தி ராமர் கோயில் விவகாரத் தில், உச்ச நீதிமன்றத்தில், ஹிந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என, நம்புகிறோம். அப்படி வராவிட்டாலும், குஜராத்தில், சோம்நாத் கோவில் கட்டப்பட்டது போல், அயோத்தியில், ராமர் கோயில் கட்டுவதற்கு, மாற்று வழிகளையும் யோசித்து வைத்து உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (132)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shree Ramachandran - chennai,இந்தியா
24-அக்-201716:32:21 IST Report Abuse

Shree Ramachandranஜனாப் சலீம் அவர்களுக்கு வேண்டுகோள் .நாகூர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழா குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா. நிறைய தர்காக்கள் உள்ளனவே அதில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் வணங்குகிறார்கள் அது சரியா? சவுதியில் தர்காக்கள் உள்ளனவா. சற்று விளக்குங்களேன்.

Rate this:
Mano - Madurai,இந்தியா
19-அக்-201718:31:33 IST Report Abuse

Manoமுட்டாள் காவிகளே. ஏன்டா இன்னும் நாள் கடத்திக்கொண்டு இருக்கிறேள். கொண்டு வாங்கடா கடப்பாறைகளை.

Rate this:
Theeran - chennai,இந்தியா
20-அக்-201715:19:53 IST Report Abuse

Theeranபொருக்கி கருப்பு பச்சை முட்டாளே, உன்னைப்போன்ற தேசத்துரோகிகளை ஒழிக்கவேண்டியுள்ளது....

Rate this:
SALEEM BASHA - RAS AL KHAIMAH-UAE,ஐக்கிய அரபு நாடுகள்
19-அக்-201718:01:28 IST Report Abuse

SALEEM BASHAதாஜ்மஹால் கட்டிடம் இஸ்லாத்திற்கு எதிரானது அதனால் அதை இடிப்பதை முஸ்லிம்கள் (உண்மையான) எதிர்க்க மாட்டார்கள் அப்படி இடித்தால் மோடி இஸ்லாத்திற்கு நன்மை செய்தவராவார் (ஆண்டவனின் பார்வையில்). குரான் மற்றும் ஹதீஸ் படிக்காத முஸ்லிம்கள் வேண்டுமானால் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் .

Rate this:
jagan - Chennai,இந்தியா
19-அக்-201718:35:35 IST Report Abuse

jagan"குரான் மற்றும் ஹதீஸ் படிக்காத முஸ்லிம்கள் " - நிஜமா படித்தவர்கள் இந்நேரம் மார்கத்தில் (மூர்க்கத்தில்) இருந்து வெளியேறி இருப்பார்கள்.......

Rate this:
Indira -  ( Posted via: Dinamalar Android App )
19-அக்-201716:31:37 IST Report Abuse

Indiraஆங்கிலேயர்கள் தங்கள் மதத்தை பரப்பினார்கள். இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்தாளும் சூழ்ச்சியே அவர்கள் செய்த வினை தான். பி ஜெ பி யின் கிறுக்குகள் பேசுவதற்கு அவ்வப்போது தலைமை அல்லது மோடியோ எச்சரிக்கை செயகிறார்கள் .சங்கீத் சோம் பேசியதற்கு மோடி பெயர் குறிப்பிடாமல் எச்சரித்தார். இன்னொரு பாபரி சம்பவம் நடக்க மோடி விட மாட்டார்.

Rate this:
appaavi - aandipatti,இந்தியா
19-அக்-201715:09:22 IST Report Abuse

appaaviஅநேகமா பாப்பிரியை போல் தாஜ்மஹாலை தரைமட்டமாக்க திட்டம் ரெடியாகி விட்டது...இனி மக்களை மதத்தின் பெயரால் திசை திருப்பி அடுத்த முறையும் ஆட்சியை தாக்க வைத்துக்கொள்ள தயாராகிறார்கள்

Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
19-அக்-201716:46:03 IST Report Abuse

Pannadai Pandianமோடியோட ஆட்சி 2024 வரை கண்டிப்பாக தொடரும். அது 2029 வரை தொடர வேண்டும். அப்போது தான் நாடு ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரும். 2019 இல் பழைய ஆட்சியே திரும்பினால் நாட்டில் எந்த முன்னேற்றமும் இல்லாது வரி ஏய்ப்பவர்களின், ஊழல் மன்னர்களின் சொர்கபுரியாகும்....

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
19-அக்-201718:15:32 IST Report Abuse

Nallavan Nallavanஉங்களுக்கு உடம்பெல்லாம் மூளை அண்ணே .... சுத்த சுயம்பிரகாசம் ..... நீங்க இருக்குறது ஆண்டிப்பட்டிக்கே பெருமை ..... ஆனா நீங்க இருக்க வேண்டிய எடமே வேற ........

Rate this:
ஜெயந்தன் - Chennai,இந்தியா
19-அக்-201714:14:23 IST Report Abuse

ஜெயந்தன்எல்லா வரலாற்றையும் கிளற ஆரம்பித்தால் நாற்றம் தான் மிஞ்சும்......

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
19-அக்-201718:16:33 IST Report Abuse

Nallavan Nallavanபலிச்சு-ன்னு சொல்றியே சென்னையில என்ன பண்ற, கூவத்தைக் கிளறிக்கிட்டு இருக்கியா ?...

Rate this:
Shriram - Chennai,இந்தியா
19-அக்-201719:40:46 IST Report Abuse

Shriramநல்லவன் அவர்களே என்னை தாங்கள் கடிந்து கொண்டதை நினைவு கூர்கிறேன் ..என்ன செய்வது இவனுங்க கூட சேர்ந்து உரையாடினால் ...பன்றியுடன் சேர்ந்த கன்றுக்குட்டி கதைதான் ..control yourself ..கூல் கூல்...

Rate this:
RamRajan - Madurai,இந்தியா
19-அக்-201713:55:45 IST Report Abuse

RamRajanதேஜோ மஹாலயா என்ற புராதன சிவன் கோவில் தான் தாஜ் மஹால் என்பதற்கான பல ஆதாரங்கள் கூகிள் தேடலில் கிடைத்தன. P N OAK என்ற சரித்திர ஆராய்ச்சியாளர் எழுதிய " THE TAJ MAHAL IS TEJO-MAHALAYA: A SHIVA TEMPLE" என்ற நூலில் இருந்து 103 ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன . ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம் . சரித்திரத்தில் அந்த சம்பவம் ஒரு கரும்புள்ளி தான் என்றாலும் அது உண்மைதானா என்று அறிய ஆர்வம் காட்டுவதில் என்ன தவறு. நிலவில் பாட்டி நூல் நூற்கும் கதையை இனியும் யார் நம்புவார்கள் . மனிதரின் பரிணாம வளர்ச்சியில் அறிவு வளர்ச்சியும் அறிவு முதிர்ச்சியும் ஒரு பாகம் தான் . அது இல்லை என்றால் மனித இனம் இவ்வளவு முன்னேறியிருக்காது. உண்மையை அறிந்துகொள்ளும் ஆர்வம் தான் பல புதிய விஷயங்களை கண்டுபிடிப்புகளை தந்துள்ளது

Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
19-அக்-201713:53:49 IST Report Abuse

pradeesh parthasarathyபிஜேபி க்கு மற்றொரு தேசிய தலைவர் ரெடி ... இம்மாதிரியான சர்ச்சைக்குரிய வகையில் பேசி தங்களை பிரபலப்படுத்தி பின்னர் இவர்கள் தேசிய தலைவர்களாக வலம் வருவது தான் இவர்களது தகுதி .....

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
19-அக்-201717:09:43 IST Report Abuse

Agni Shivaஇது சர்ச்சைக்குரிய பேச்சு இல்லை... மறைத்து வைக்கப்பட்ட உண்மையை திடிரென்று பேசுவதால் உங்களை போன்றவர்களை ஒருவேளை அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கலாம். உங்களை அதிர்ச்சிக்கு உள்ளாகும் செய்தி தவறாக தான் இருக்கமுடியும் என்று கூற வருகிறீர்களா?...

Rate this:
ரத்தினம் - Muscat,ஓமன்
19-அக்-201713:48:02 IST Report Abuse

ரத்தினம்கோவில்களை இடிச்சதை பற்றி சொன்னாலே அது மத வாதம். செஞ்சதா தப்புன்னு கூட சொல்ல மாட்டேங்கிறானுங்க .நியாயப்படுத்துறாங்க . அப்போ 600 ஆண்டு காலம் பண்ணின அழிச்சாட்டியத்தை பாராட்டணுமா . நாம நம்ம நாட்டில தான் வாழுறோமா இல்லை பாகிஸ்தானில் வாழுகிறோமா. எல்லாம் காந்தியால் , காங்கிரசால் வந்த வினை.

Rate this:
தலைவா - chennai,இந்தியா
19-அக்-201716:08:59 IST Report Abuse

தலைவா எல்லாம் மென்மையான மனம் கொண்ட இஸ்லாமிய அரசர்களால் வந்த வினை... ஏன் இப்போதும் இது போன்ற அற்பர்களுக்கு வளமும் வாழ்வும் வழங்கி வரும் இஸ்லாமிய அரசாங்கங்களின் சகிப்புத்தன்மையால் இப்படி உளறி திரிகின்றன அற்ப மத வெறியர்கள்....

Rate this:
S.Ganesan - Hosur,இந்தியா
19-அக்-201713:24:27 IST Report Abuse

S.Ganesanவரவர பாஜகவின் பிரமுகர்கள் வாய்க்கு வந்தபடி உளறுவதற்கு அளவே இல்லாமல் போய் விட்டது. இவர்களை கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் பாஜகவின் தலைமை கண்டிக்கப்பட வேண்டும்.

Rate this:
தலைவா - chennai,இந்தியா
19-அக்-201716:10:34 IST Report Abuse

தலைவா அவரு கள்ளமௌனத்தில் இருப்பாரு... எதாவது வசமா கேட்டா சீரியல் நடிகைகள் தோற்கும் அளவிற்கு பெர்பார்மன்ஸ் கொடுப்பாரு நீலி கண்ணீர் வடிப்பாரு.. .மொத்தத்தில் நல்ல நாடக காரன்....

Rate this:
மேலும் 113 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement