'நிலவேம்பு குடிக்க வேண்டாம்' என நடிகர் கமல் உளறல் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நிலவேம்பு,Chiretta, நடிகர் கமல், actor Kamal, டெங்கு, Dengue, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்,Health Minister Vijayabaskar, கிங் இன்ஸ்டிடியூட், King Institute, தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன்,Tamil Nadu Health Secretary Chief Secretary Radhakrishnan, சிக்குன் குனியா ,Sikunan Gunia, உளறல்,Blether, நோயாளிகள், Patients, தமிழகம், Tamilnadu,டெங்கு காய்ச்சல்,Dengue Fever,தமிழக சுகாதாரத் துறை ,Tamil Nadu Health Department, அலோபதி மருந்து,Allopathy Pharmaceuticals,

'நிலவேம்பு குடிநீரை வினியோகம் செய்ய வேண்டாம்' என நடிகர் கமல்ஹாசன் தன் ரசிகர் மன்றத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளார். அரசின் அறிவிப்புக்கு எதிரான இந்த விஷம பிரசாரத் தால் டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 'மனித வாழ்வோடு விளையாடுவதா...' என அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்; நடிகர் கமல் நடிப்பை மட்டும் கவனிக்குமாறும் அறிவுரை கூறியுள்ளனர்.

நிலவேம்பு,Chiretta, நடிகர் கமல், actor Kamal, டெங்கு, Dengue, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்,Health Minister Vijayabaskar, கிங் இன்ஸ்டிடியூட், King Institute, தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன்,Tamil Nadu Health Secretary Chief Secretary Radhakrishnan, சிக்குன் குனியா ,Sikunan Gunia, உளறல்,Blether, நோயாளிகள், Patients, தமிழகம், Tamilnadu,டெங்கு காய்ச்சல்,Dengue Fever,தமிழக சுகாதாரத் துறை ,Tamil Nadu Health Department, அலோபதி மருந்து,Allopathy Pharmaceuticals,

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்குவை குணப் படுத்த நேரடி மருந்துகள் இல்லை. அதேநேரம் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறையும் ரத்த தட்டையணுக்களின் எண்ணிக்கை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு குடிநீர் கஷாயம், மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த மருத்துவமுறை தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நோயாளிகளுக்கு நல்ல பலனை அளித்துள்ளது. அதனால் தமிழக அரசே டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயத்தை அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்து உள்ளது. அலோபதி மருந்துகளை கையாளும் டாக்டர்களும் இதை எதிர்க்கவில்லை.எனவே டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிலவேம்பு கஷாயம் மிகப்பெரிய ஆறுதலான நம்பிக்கை தரும் மருந்தாக உள்ளது.

இந்நிலையில் நிலவேம்பு கஷாயத்தால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என்ற பொருளில் நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். இக்கஷாயத்தால் மலட்டுத் தன்மை ஏற்படும் என சமூக வலை தளத்தில் தகவல் வேகமாகப் பரவி வருவதால் கமல் இந்த கருத்தை வெளியிட்டு உள்ளார். அதில் 'சரியான ஆராய்ச்சி முடிவுகள்

கிடைக்கும் வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு வினியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டு கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்.

ஆராய்ச்சி அலோபதியார் தான் செய்ய வேண்டுமென்றில்லை. பாரம்பரிய காவலர் களே செய்திருக்க வேண்டும். மருந்துக்கு பக்க விளைவுண்டு என்பது பாரம்பரியம் தான்' என குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பால் நிலவேம்பு உட்கொண்டு குணம் பெற்றவர் களும், தற்போது டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தாங்கள் அருந்திய நிலவேம்பு குடிநீரால், பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுமோ என அச்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: டெங்குவை கட்டுப்படுத்த, நடிகர் கமல், தன் இயக்கத்தினர் மூலம் இதுவரை எந்த ஆக்கப் பூர்வமான பணிகளிலும் ஈடுபடவில்லை. இந்நிலையில்இதுவரை நிலவேம்பு வழங்கி உதவி செய்தது போலவும் தற்போது அதை நிறுத்த வேண்டும் என்பது போலவும், உளறியுள்ளார்.

அரசியல் புகழை அடைய வேண்டும் என்ற ஆர்வ கோளாறில் நடிகர் கமல் 'ட்விட்டர்' சமூக வலைதளத்தில் ஏதோ சில வார்த்தைகளை பதிவு செய்து ஊடக கவனத்தை ஈர்த்து 'பப்ளிசிட்டி' தேடுகிறார். அவரது 'பப்ளிசிட்டி ஸ்டன்ட்'டுக்கு தற்போது டெங்கு நோயாளி களை பலிகடா ஆக்கியுள்ளார்.அவரது அனைத்து கருத்துகளும், பக்குவமின்மை யையும் சமூக பொறுப்பின்மையும் காட்டு கின்றன. அரசியல் ஆசையில் 'பப்ளிசிட்டி'க்காக மக்கள் மத்தியில் எந்த வகையிலும் பீதியை கிளப்புவார் என்பதையே அவரது நடவடிக்கை காட்டுகிறது. அவர் நடிப்பை மட்டும் பார்த்து கொள்வதே நல்லது. மாறாக மனித வாழ்க்கை யுடன் விளையாட வேண்டாம். இவர் அலோபதியையும் சித்த மருத்துவத்தையும் படித்த நிபுணர் போல், தவறான தகவல்கலை பரப்ப வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிலவேம்பு குடிநீர் ஆராய்ச்சியால் நிரூபணம்


தமிழக சுகாதாரத் துறை திட்டவட்டம்:டெங்கு

Advertisement

காய்ச்சலை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்டவர் களுக்கு நிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்கப் படுகிறது.

இதுகுறித்து, தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் நமது நிருபரிடம் கூறிய தாவது:


டெங்குவை தடுக்க இதுவரை தடுப்பூசி கண்டறியப்படவில்லை. நேரடி மருந்துகள் இல்லை. வழக்கமான காய்ச்சலுக்கான மருந்துகளே பயன்படுத்தப் படுகின்றன.ஆனால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த தட்டணுக்கள், நீர்ச்சத்து குறைவதை தடுக்க நிலவேம்பு குடிநீர் கஷாயம் வழங்கப் படுகிறது. இது நல்ல பலனை தருகிறது.

கடந்த, 2006க்கு பின், சிக்குன் குனியா பரவியபோது, நிலவேம்பு குடிநீர் பெரும் அளவு உதவியது. அதன்பின், வந்த டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களுக்கு நிலவேம்பு குடிநீர் பயன் படுத்தப்பட்டு, ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. அலோபதி மருந்துகளுக்கு மேற்கொள்ளப்படும், அதே ஆராய்ச்சி வழிமுறைகள், நிலவேம்பு குடிநீருக்கும், சித்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் தேசிய ஆராய்ச்சி மையங்களை பயன்படுத்துகிறோம். டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு தான் உறுதியான தீர்வு. அதில் மாற்று கருத்து இல்லை. எனவே, டெங்குவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும். சமூக வலை தளங்களில் வரும், தவறான தகவல்களை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் எச்சரிக்கை


சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிய தாவது: ''நிலவேம்பு கஷாயம் குடித்தால் பக்க விளைவு ஏற்படும் என பரவும் தகவல்கள் தவறானவை. நிலவேம்பு குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என சென்னையில் உள்ள 'கிங் இன்ஸ்டிடியூட்' சான்றிதழ் வழங்கியுள்ளது,'' என்றார். திருச்சியில் அவர் கூறியதாவது: ''தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் ௧௫ நாட்களில் கட்டுப் படுத்தப்படும். நிலவேம்பு குடிநீர் குறித்து, சமூக வலைதளங்கில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என எச்சரித்துள்ளார்.

நிலவேம்பு நல்லது


நடிகர் கமலின் நிலவேம்பு கருத்து குறித்து, பா.ஜ., தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியதாதாவது: நான் அலோபதி மருத்துவ பணியில் உள்ள டாக்டர். நாங்களே நிலவேம்பு குடிநீரை எதிர்க்க வில்லை. நில வேம்பு குடிநீரின் மருத்துவ தன்மை, அனுபவம் மற்றும் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டது. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் உட் கொள்வது தவறில்லை. இந்த விஷயத்தில், கமல் போன்ற பிரபலங்கள், மக்கள் மத்தியில் தேவையற்ற பீதியை கிளப்ப கூடாது.
-நமது நிருபர் குழு-


Advertisement

வாசகர் கருத்து (139)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
24-அக்-201704:57:17 IST Report Abuse

Rajendra Bupathiஎதையோ அள்ளி விட்டா நாலு பேரு பேசுவாங்கள்ள அத தான் செஞ்சி இருக்காரு? ஆனா இப்பா காறி கழுவி ஊத்துவாங்கன்னு நினைச்சி கூட பாத்து இருக்க மாட்டாரு?

Rate this:
Vela - Kanchipuram,இந்தியா
20-அக்-201700:02:42 IST Report Abuse

Velaஇது போன்ற பிரபலங்கள் முரணான கருத்துக்கு முன்வருதல் கூடாது.

Rate this:
Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19-அக்-201720:01:44 IST Report Abuse

Ramesh Rayenநில வேம்பு கஷாயம் குடித்தால் முத்தம் கொடுக்க முடியாது

Rate this:
மேலும் 136 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X