'வாகன நிறுத்தத்தில் காரை நிறுத்துங்கள்' கெஜ்ரிவாலுக்கு கவர்னர் அறிவுரை Dinamalar
பதிவு செய்த நாள் :
'வாகன நிறுத்தத்தில் காரை நிறுத்துங்கள்'
கெஜ்ரிவாலுக்கு கவர்னர் அறிவுரை

புதுடில்லி: 'வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், காரை நிறுத்துங் கள்,'' என, டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை, கவர்னர் அறிவுறுத்தியுள்ளார்.

 டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், Delhi Chief Minister Arvind Kejriwal,  ஆம் ஆத்மி, AAP, வேகன் ஆர்,Wagon R,  டில்லி தலைமை செயலகம் ,  Delhi Secretariat,டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜாலு, 
Delhi Sub-Divisional Governor Anil Baijalu, கெஜ்ரிவால் ,Kejriwal,கவர்னர், Governor, புதுடில்லி,New Delhi,

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. ஆம் ஆத்மி கட்சியை, துவக்கியபின், 2013ல் அவருக்குகுந்தன் சர்மா என்பவர் நீல நிற, 'வேகன் ஆர்' காரை பரிசாக வழங்கினார். அந்த காரை தான் கெஜ்ரிவால், 2015ல் 2-வது முறையாக முதல்வராகும் வரை பயன்படுத்தி

வந்தார். இப்போது அந்த காரை, கட்சியின் செய்தி தொடர்பாளர், வந்தனா பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில், டில்லி தலைமை செயலகம் முன்நிறுத்தப்பட்டிருந்த அந்த கார், காணாமல் போனது; போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே,கார் மாயமானது பற்றி டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜாலுக்கு கெஜ்ரிவால் எழுதிய கடிதத்தில் 'டில்லியில் சட்டம் ஒழுங்கு மோசமாகி வருவதற்கு, என் கார் திருட்டு போனதே உதாரணம்' என கூறியிருந்தார்.

பின், உ.பி., மாநிலம் காஜியாபாத்தில் கேட்பார் இன்றி நிறுத்தப்பட்டிருந்த கெஜ்ரிவாலின் காரை கண்டுபிடித்து போலீசார் மீட்டனர். இந்நிலையில், கெஜ்ரிவாலுக்கு கவர்னர் பைஜால் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் தான், காரை நீங்கள் நிறுத்தி இருக்க வேண்டும். அப்படிநீங்கள் செய்திருந்தால், கார்

Advertisement

திருடு போய் இருக்காது. சட்டம் - ஒழுங்கு நிலையை, நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். உங்கள் கார் மாயமானது பற்றி அறிந்தவுடன், சிறப்பு போலீஸ் படைகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிரமாக தேடி, இரண்டே நாளில். உங்கள் காரை கண்டுபிடித்து விட்டனர். இதற்காக, போலீசாரை பாராட்ட வேண்டும்.இவ்வாறு கடித்ததில், கவர்னர் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Solvathellam Unmai - Chennai,இந்தியா
19-அக்-201713:35:10 IST Report Abuse

Solvathellam Unmaiயாருப்பா அந்த கவர்னர்.. விளங்கிடும்

Rate this:
Abdul Khader - Riyadh,சவுதி அரேபியா
19-அக்-201710:57:34 IST Report Abuse

Abdul KhaderIf the Law and Order is good, there will be no question of where the Car is parked. No educated will admit the answer of the Governor to keep the car in the parking place especially the Chief Minister's car.

Rate this:
Kabali - Madurai,இந்தியா
19-அக்-201711:16:17 IST Report Abuse

Kabaliஅப்பாடா என்ன ஒரு ஞானம். நீங்க ஒரு KSA விஞ்ஞானி அன்னே. உங்களிடம் இருக்கும் பணத்தை எல்லாம் உங்க வீட்டுக்கு முன்னாள் போட்டு விட்டு தேவை படும் பொது எடுத்து கொள்ளுங்கள். ஏன் பீரோவில் வைத்து பூட்டுகிறீர்கள்....

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
19-அக்-201711:52:12 IST Report Abuse

Cheran Perumalவந்தனா என்பவர்தான் காரை பயன்படுத்தி வருவதாக செய்தி. அவர் எங்கு வேண்டுமானாலும் நிறுத்தலாமா?பொங்குவதற்கும் ஒரு அளவு வேண்டும்....

Rate this:
balakrishnan - Mangaf,குவைத்
19-அக்-201709:53:24 IST Report Abuse

balakrishnanஇவரே வேண்டும் என்று காரை ஒளித்து வைத்திருப்பார் .

Rate this:
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
19-அக்-201709:40:24 IST Report Abuse

என்னுயிர்தமிழகமேகமல் மீட் பண்ணிய பின் கார் காணாமல் போகிறது என்றால் கமலுக்கு கோபம் ?

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-அக்-201709:32:33 IST Report Abuse

Srinivasan Kannaiyaதனிமனித ஒழுக்கம் இருந்து இருந்தால் இது நடநது இருக்குமா...

Rate this:
Tamil - Madurai,இந்தியா
19-அக்-201714:52:51 IST Report Abuse

Tamilதனிமனித ஒழுக்கம் கெஜ்ரிவால்க்கு மட்டும் தானா, தூய்மை இந்தியா பேசும் மோடியின் மந்திரி சபையில் மந்திரியாய் இருப்பவருக்கு இல்லையா ?...

Rate this:
Renga Naayagi - Delhi,இந்தியா
19-அக்-201708:34:52 IST Report Abuse

Renga Naayagiகாராவது பரவாயில்ல ...வீட்டுக்காரிய பத்திரமா பாத்துக்கோங்க ...

Rate this:
Tamil - Madurai,இந்தியா
19-அக்-201714:54:40 IST Report Abuse

TamilR S S , B J P யின் மோடி அடசியில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் தான் , நன்றி...

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
19-அக்-201708:30:59 IST Report Abuse

தேச நேசன் ஜாலிக்காகத்தான் அதனைக் கடத்தி உத்தரபிரதேசம் வரை கொண்டு சென்றேன் என கடத்தியவனே ஒப்புக்கொண்டு விட்டான் இதனைக் கண்டுபிடிக்க ஆன செலவில் இன்னொரு காரே வாங்கியிருக்கலாம்

Rate this:
Aruna Subramanian - Kuala Lumpur,மலேஷியா
19-அக்-201707:38:10 IST Report Abuse

Aruna Subramanianநடந்ததை எல்லாம் கூட்டிக்கழித்து பார்த்தால் இதுயெல்லாம் வேண்டும் என்றே யாரோ செய்தது போல் தெரிகிறதே யார் அந்த கிரிமினல் . பாவம் இந்த முதல்வர்.

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
19-அக்-201708:31:38 IST Report Abuse

தேச நேசன் கிரிமினல் முதல்வர் பாவமா?...

Rate this:
Aruna Subramanian - Kuala Lumpur,மலேஷியா
19-அக்-201712:04:27 IST Report Abuse

Aruna Subramanianஅமாம் இந்த முதல்வர் அரசியல் தெரியாத ஓர் கிரிமினல் தான். அரசியல் கற்றிந்தல் தலைநகரிலேயே இவர்கள் எல்லோரையும் புரட்டியிருப்பர். அரசியல் தெரியாமல் ஆட்சிக்கு வந்து ஒன்றும் எய்யமுடியாமல் தலைகீழாக அலையும் ஓர் பைத்தியக்கார கிரிமினல் இவர்தான்....

Rate this:
Tamil - Madurai,இந்தியா
19-அக்-201714:57:43 IST Report Abuse

Tamilகெஜ்ரிவால் கிரிமினலா...

Rate this:
Malar - nsw,ஆஸ்திரேலியா
19-அக்-201705:12:05 IST Report Abuse

Malarநிச்சயமாக சட்டம் ஒழுங்கு யாராக இருந்தாலும் ஒன்றேதான்..

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-அக்-201704:50:35 IST Report Abuse

Kasimani Baskaranபதவியில் இருப்பவருக்கு அன்பளிப்பு என்றால் அது கௌரவமாக தோன்றும் லஞ்சம் என்பதை புரிந்துகொள்ள இல்லைஆத்மீ மட்டிகளுக்கு புரியாது... அவர்களை பொறுத்தமட்டில் மோடி போட்ட கோட் மட்டுமே தெரியும்... நேரத்துக்கு தகுந்தமாதிரி கண்ணாடி அணிபவர்கள் இவர்கள்...

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement