நிலவேம்பு கஷாயம் குறித்த கருத்து : கமல் மீது புகார் | நிலவேம்பு கஷாயம் குறித்த கருத்து : கமல் மீது புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிலவேம்பு கஷாயம் குறித்த கருத்து : கமல் மீது புகார்

Added : அக் 19, 2017 | கருத்துகள் (27)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 கமல்ஹாசன், Kamal Hassan, நிலவேம்பு, Chiretta, டெங்கு, Dengue,  தமிழகம், Tamilnadu, தேவராஜன் , Devarajan, சைபர் கிரைம் போலீஸ், Cyber ​​Crime Police, கமல்,Kamal,சென்னை ,Chennai, போலீஸ் கமிஷனர், Police Commissioner,

சென்னை : தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசே, நிலவேம்பு கஷாயத்தை அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்து உள்ளது. ஆனால் நிலவேம்பு கஷாயத்தால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என்ற பொருளில் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் தகவல் ஒன்றை பதிவிட்டார். இதற்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் கமல் மீது சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தான் 10 ஆண்டுகளாக நிலவேம்பு கஷாயத்தை அருந்தி வருவதாகவும், அதனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்றும், நிலவேம்பு கஷாயத்தை பற்றி கமல் தவறான தகவல்களை பரப்பி வருகிறார், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த புகார் மனு சைபர் கிரைம் போலீஸ்க்கு மாற்றப்பட்டுள்ளது.



கமலை விசாரிக்க போலீஸ் திட்டம்

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramaniam - Prague,செக் குடியரசு
20-அக்-201702:59:23 IST Report Abuse
Subramaniam சித்த மருந்துகளை பரிசீலிக்க ஆங்கில மருத்துவ முறைகளை பயன் படுத்துவது கேவலம்.
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
20-அக்-201700:10:50 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam இந்தக் கமலுக்கு ஏன் இப்படி நா (நாக்கு) கெட்டுப் போனது? தான் உண்டு தன் தொழில் உண்டு என்பதை விட்டுவிட்டுப் புலம்பித் திரிவது ஏன்?
Rate this:
Share this comment
Cancel
Devaraj - moolekaodu ,சுரிநாம்
19-அக்-201718:28:54 IST Report Abuse
Devaraj கமல் ஒரு கோமாளி யாக மாறி விட்டார். தனது மதிப்பை கெடுத்து கொண்டு வருகிறார். நானும் ரவுடி தா என்று காமிடியன் வடிவேலு சொல்லற மாதிரி, தமிழ் நாடு மக்கள் தன்னை அரசியல் வாதி என்று கருத வேண்டும் என்பதற்கு இந்த மாதிரி காமிடி பண்ணி வருது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X