Girl, 9, Dies As Father Allegedly Made To Wait In Queue At AIIMS In Patna | எய்ம்ஸ் மருத்துவமனையில் டாக்டர் அலட்சியத்தால் சிறுமி பலி| Dinamalar

எய்ம்ஸ் மருத்துவமனையில் டாக்டர் அலட்சியத்தால் சிறுமி பலி

Updated : அக் 20, 2017 | Added : அக் 19, 2017 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எய்ம்ஸ், AIIMS,டாக்டர்கள், doctors,கூலிதொழிலாளி, coolie worker,சிறுமி, girl, காய்ச்சல், fever, பாட்னா, patna, சிகிச்சை,treatment, ராம்பாலக் , rampalak, பீஹார்,Bihar,  எய்ம்ஸ் மருத்துவமனை,AIIMS Hospital,  ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்,Rashtriya Janata Dal leader Lalu Prasad, எய்ம்ஸ் இயக்குநர் பிரபாத் குமார் சிங், AIIMS director Prabhat Kumar Singh,

பாட்னா, சிகிச்சை பெறுவதற்கான விண்ணப்பத்தை பதிவு செய்வதற்காக, வரிசையில் தந்தை காத்திருக்க, 9 வயது சிறுமி, பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்துள்ளது. ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால், மகளின் உடலை, 4 கி.மீ., துாரம், அவர், தோளில் சுமந்து சென்றார்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள, லக்கிசராய் மாவட்டத்தைச் சேர்ந்த, ஏழை கூலித் தொழிலாளி ராம்பாலக், கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட, 9 வயது மகள், ரவ்ஷன் குமாரியை, பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.சிகிச்சை அளிப்பதற்கு முன், பெயரை பதிவு செய்து வரும்படி, டாக்டர்கள் கூறியுள்ளனர். அதன்படி, சிகிச்சை பெறுவதற்கான விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கு, ராம் பாலக் காத்திருந்தார். இதற்கிடையில், உடல்நிலை மோசமடைந்த சிறுமி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மகளின் உடலை, சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் கேட்டு, ராம் பாலக் காத்திருந்தார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் அந்த கோரிக்கையை ஏற்கவில்லை. நீண்ட நேரம் காத்திருந்த அவர், மகளின் உடலை தோளில் சுமந்தபடி, 4 கி.மீ., தொலைவில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டு சென்று, அங்கிருந்துதன் கிராமத்துக்கு சேர்ந்துள்ளார்.இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சியான, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
20-அக்-201707:09:35 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இது தாண்டா இந்தியா. வயிறெரிந்து சொல்கிறேன். கலிபுருஷன் உண்மையிலேயே வந்தால் அவன் முதலில் அழிக்கபோவது இந்தியாவை தான்.. பல நூறு கோடி மதிப்புள்ள மருத்துவ வசதி கண் முன்னே.. 140 கிமீ தாண்டி மனம் பதைக்க மகளை சுமந்து வந்த பெற்றோர் குழந்தையுடன் மருத்துவமனையில்.. நோயின் பாதிப்போ, பெற்றோரின் அழுகையோ, பிஞ்சு குழந்தையின் கஷ்டமோ அறியாத மருத்துவர்கள், சக நோயாளிகள். மனிதாபிமானம் இல்லா சமுதாயம். இறந்த பிறகும் உதவாத சமூக, அரசு அமைப்புகள்.. தேவைக்கு ஏற்ப போலி நாடகமாடும் பச்சோந்திகள் போல அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள். கேட்டால் "சென்ற ஆட்சியில்" என்று ஒளிந்து கொள்ளும் பேடிகள். நக்சலைட்டும், மாவோயிச்டும் பிறப்பதில்லை, கேடுகெட்ட அரசு நிர்வாகத்தால் உருவாக்கப்படுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Nalanvirumbi - New York,யூ.எஸ்.ஏ
20-அக்-201703:18:09 IST Report Abuse
Nalanvirumbi இன்னமும் தமிழ்நாட்டிலும் அவசர சிகிச்சைக்கு யாரை கூட்டிக்கொண்டு சென்றாலும் அவரை விட்டுட்டு நீ போய் பதிவு சீட்டு வாங்கி வா என்று அரை கிலோமீட்டரில் உள்ள வெளி நோயாளி பார்க்குமிடத்துக்கு அனுப்படுவது இன்றும் நடக்கிறது. நர்ஸு முதல் நோயாளி வரை டாக்டர் உட்பட அனைவருக்கும் உடல் அமைப்பு ஒன்றுதான் என்பதை எந்த மனிதனும் நினைப்பதில்லை. மனித நேயம் என்று மீளுமோ....?
Rate this:
Share this comment
Cancel
praveenv - chennai,இந்தியா
19-அக்-201719:37:11 IST Report Abuse
praveenv படிக்கும் போதே அழுகிறேன்.. மனிதாபின்மானமற்ற மனிதர்கள்.. ஒரு நல்லவன் கூடவா அங்க இல்ல?
Rate this:
Share this comment
Cancel
19-அக்-201718:56:28 IST Report Abuse
Gayathriparameswaran மனிதாபிமானம் இல்லாத மக்கள் சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர் மட்டும் அல்ல உதவி புரிய மறந்த மக்களும் தான இதில் குற்றவாளில் அனைவருக்கும் தண்டனை தர வேண்டும் உதவி புரிவது அவரவர் விருப்பம் மட்டும் அல்ல கடமை எனபதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Mano - Madurai,இந்தியா
19-அக்-201718:29:52 IST Report Abuse
Mano இதெல்லாம் நம்ம நாட்டுல ரொம்ப சகஜம் தான் சார். யாரும் பெருசா எடுத்துக்க வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
MaRan - chennai,இந்தியா
19-அக்-201718:27:16 IST Report Abuse
MaRan இதுதான் இந்தியாவின் உண்மை,, மற்றபடி, இந்தியா வளர்கிறது, மிளிர்கிறது,, ஊழல் குறைந்து விட்டது,, என்று கூறுவதெல்லாம் பொய்,, மோடி அல்ல,, காந்தியே மறுபிறப்பு எடுத்து வந்தாலும் அவரையும் இந்த மண் மாற்றிவிடும், பணம் செல்வாக்கு இல்லாத நம்மில் ஒவ்வொருவருக்கும் இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் வரலாம்,, நேற்றுவரை விளையாடி தோள் சாய்ந்து பிஞ்சு மொழி பேசிய தன் மகள் இன்று அதே தோளில் பிணமாகினால் அந்த தந்தை தாயின் நிலையில் இருந்து யோசித்தால் மனம் பதறுகிறது,, இதுவே லாலுபிரசாத் யாதவோ, நிதிஷ் குமாரோ வந்தால் வரிசையில் நின்று கார்ட் வாங்க சொல்வீரா, மருத்துவரே, அவலம்,, தேவை புரட்சி
Rate this:
Share this comment
Cancel
Mohammed Jaffar - Chennai,இந்தியா
19-அக்-201717:45:30 IST Report Abuse
Mohammed Jaffar மனசே ரெம்ப கஷ்டமா இருக்கு... நாம எத நோக்கி போய்கிட்டு இருக்கோம்??? வர வர மனிதநேயம் செத்துடுச்சு போல்.... வருத்தமான செய்தியை இருக்கு... அரசாங்கம் அப்படித்தானே இருக்கு.. அரசாங்க ஊழியர்கள் அப்படித்தானே இருக்கிறீர்கள்... மக்களும் அப்படியே... குழந்தையே இழந்துட்டு அந்த தாயும் தந்தையும் என்ன பாடு பாடுவாங்க... நினைக்கவே வேதனையை இருக்கு... ஏன் ஒருத்தர் கூட இதற்கு மனம் இரங்கவில்லை.. இன்னும் கொஞ்ச நாளே எல்லாரும் நடை பிணமா வாழ போறோம் போல்..
Rate this:
Share this comment
Cancel
Kundalakesi - Coimbatore,இந்தியா
19-அக்-201717:09:08 IST Report Abuse
Kundalakesi தயவு செஞ்சு இதுக்கெல்லாம் ஆதார் போன்ற விரல் ரேகை பதிவு முறையை உபயோகப்படுத்துங்கள். நேரத்தை வீணாக்காதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
19-அக்-201716:55:41 IST Report Abuse
உஷாதேவன் இரக்கமில்லா இதயங்களால் இறந்து விட்ட குழந்தை . அப்புறம் எதுக்கு எமர்ஜென்ஸி. இறந்த உடலை கொண்டு செல்ல வாகன வசதி கூட தராத தாராள மனதுடன். எங்கே செல்கிறது நம் நாடு. கொடுமை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை